செய்தி: பொதுமக்களின் உணர்வுகளையும், நகரின் பாரம்பரியத்தையும் கருத்திற்கொண்டு காவல் சாவடியை அகற்றிடுக! மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byvilacksma (jeddah)[13 March 2018] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46060
மகிழ்ச்சி .
பாரம்பரியமும் காப்பாற்றப்பட வேண்டும் . பெருகி வரும் குற்றங்களையும் தடுத்திட வேண்டும் . எப்படி ?
ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் நமதூர் வழக்குகள்தான் ஏகப்பட்டது உள்ளதாம் . ( பிறர் சொல்லி அறிந்ததுதான் ) அதில் பெரும்பாலானவை முடுக்கு சண்டை . போக்குவரத்து வழக்கு மற்றும் போதைப்பொருள் வழக்குகளும் உள்ளதாம் .
முடுக்கு சம்பந்தப்பட்ட சண்டைகள் , முன்பு ஜமாத்துகள் மூலமும் , பஞ்சாயத்து தலைவர்கள் வாயிலாகவும் தீர்க்கப்பட்டது . தற்போது பெரும்பாலான ஜமாத்துகளில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை , இணை கோஷ்டி , வினை கோஷ்டி என்று ஏகப்பட்டது உள்ளது . அதன் பிரதிபலன்தான் காவல்நிலையம் , நீதிமன்றம் என்று அலைந்து இந்த ஊருக்கு காவல் நிலையம் வேண்டும் என்பவர்களது எண்ணங்களை நியாப்படுத்திக்கொண்டிருக்கிறோம் .
போக்குவரத்து வழக்குகளை பொறுத்தவரை ஒருவழிப்பாதையை உதாசீனப்படுத்துகிறோம் என்பது உண்மையே . மேலும் இது சம்பந்தப்பட்ட வழக்குகளில் பெற்றோர்களே முக்கிய காரணம் . லைசென்ஸ் இல்லாத பையனுக்கு எதுக்கு வண்டி வாங்கி கொடுக்க வேண்டும் ? அவன் யார் யாரோடு பழகுகிறான் , ஒரு பைக்கில் எத்தனை பேர் செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க தவறியதும் குற்றங்களாக மாறி , காவல்துறை வழக்காக மாறியதும் பெற்றோர்கள் செய்த தவறே !
போதைப்பொருள் , மது நமதூரில் இருக்கத்தான் செய்கிறது . இதை ஒழிக்க காவல்துறை உதவி தேவைதான் என்றாலும் காவல் நிலையம் இல்லாமலேயே இவைகள் கட்டுப்படுத்தக்கூடியதுதான் .
காவல் நிலையம் என்று வந்துவிட்டால் அதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படும்தான் . சிறிய வழக்காக இருந்தாலும் , நாம் காவல் நிலையம் செல்ல வேண்டும் . நம் சொந்த பந்தங்கள் , பெண்கள் காவல் நிலையத்தில் ஆதி உதைபடும் காட்சியை நேரில் பார்க்க நேரிடும் . தேவையா நமக்கு ?
சாதாரண முடுக்கு சண்டைகளை ஜமாத்துகள் மூலம் தீர்ப்போம் , பிள்ளைகளுக்கு பைக் வாங்கி கொடுப்பதோடு நில்லாமல் , அவனை நம் கண்காணிப்பில் வைப்போம் . போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்போம் , ஒருவழி பாதையை உதாசீனப்படுத்தாமல் இருப்போம் .
காவல் நிலையம் தேவை இல்லை , காவல் கண்காணிப்பு மட்டுமே போதும் .
நமதூர் பாரம்பரியத்தை எப்போது விட்டுக்கொடுக்காமல் பாதுகாப்போம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross