Re:...நீங்கள் படித்தது ஞாபகத்தில் வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம் posted bymackie noohuthambi (kayalpatnam )[16 March 2018] IP: 27.*.*.* India | Comment Reference Number: 46062
சில மாணவர்கள் என்னிடம் வந்து அப்பா நாளை அரசு தேர்வு நடக்கிறது. எனக்காக நீங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று வேண்டிக் கொண்டார்கள். நீ படிக்கவே இல்லை வீணாக பொழுதை கழித்தாய் இப்போது இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்றால் நான் எவ்வாறு பிரார்த்திப்பது. நீ படித்தது எல்லாம் ஞாபகத்துக்கு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்... போய் வா என்று வாழ்த்தி அனுப்பினேன்.
வீட்டிலிருந்து வழக்கமாகக் கிளம்பும் நேரத்துக்கு முன்கூட்டியே கிளம்பிச் செல்லுங்கள். சீக்கிரமாகத் தேர்வறையை அடைவது பதற்றத்தைத் தவிர்க்கும். நேரம் அதிகமாக இருந்தால், தனியாகவோ நெருங்கிய நண்பருடனோ காலாற சிறிது நடைபோடுங்கள். ஆனால், அப்போது தேர்வைப் பற்றிப் பேசுவதைத் தவிருங்கள்.
கேள்வித் தாள் வாசிப்பில் கவனம்
பதிலை எழுத ஆரம்பிக்கும்முன் நிதானமாகக் கேள்வித் தாள்களின் குறிப்புகளைக் கவனமாகப் படியுங்கள். அதன்பின் கேள்விகளைக் கவனமாக வாசியுங்கள். இது தவறாகப் பதில் எழுதுவதைத் தவிர்க்க உதவும்.
பதில் பாதியில் நின்றுவிட்டதா?
தெரியாத கேள்வி இடம்பெற்றாலோ தெரிந்த பதிலை எழுதும்போது பாதியில் மறந்துபோனாலோ ஒருவிதமான பதற்றமும் பயமும் ஏற்படுவது இயல்பு. இந்தச் சூழ்நிலையில், கேள்வித் தாளையும் பதில் எழுதும் தாளையும் மூடிவையுங்கள். ஒரு எட்டு நடந்து கழிவறைக்குச் செல்லுங்கள், பின் சிறிது தண்ணீர் குடியுங்கள். உங்கள் இருக்கையில் அமர்ந்த பிறகு ஆழமாகப் பத்து முறை மூச்சை இழுத்துவிடுங்கள். பின் உங்களுக்கு நன்கு தெரிந்த வேறு கேள்விக்கு விடை எழுத ஆரம்பியுங்கள். பாதியில் நின்ற பதிலை இறுதியில் ஒருகை பாருங்கள்.
கை கால்களுக்கு ஓய்வு
தேர்வு எழுதும்போது கை கால்களை அவ்வப்போது நீட்டிமடக்குவது கொஞ்சம் ஓய்வு தரும். முடிந்தால் அவ்வப்போது எழுந்தும் உட்காருங்கள். கூடுதல் தாளை வாங்கும்போது வாய்ப்பிருந்தால் எழுந்து நின்று வாங்குங்கள்.
மூன்று மணி நேரம்தான்
உங்களின் சராசரி ஆயுட்காலம் 70 வருடங்கள் என்று வைத்துக்கொண்டால், நீங்கள் தோராயமாக ஆறு லட்சம் மணி நேரம் வாழப்போகிறீர்கள். அவற்றை இந்த மூன்று மணி நேரம் தீர்மானிக்கப்போவதாக நினைப்பது நகைச்சுவையாக இல்லை
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross