Re:...மாற்றம் ஒன்றுதான் மாறாதது ஆனால்.... posted bymackie noohuthambi (kayalpatnam )[16 March 2018] IP: 27.*.*.* India | Comment Reference Number: 46063
மாற்றங்கள் வரவேற்கத்தக்கவைத்தான். மாற்றம் ஒன்றுதான் மாறாதது.
ஆனால் முன்காலத்தில் இல்லாத பல புதிய சம்பிரதாயங்கள் நம் இல்லங்களில் புகுந்து விட்டதையும் இங்கு குறிப்பிட வேண்டும். பெண்கள் பூப்பெய்தி விட்டால் அவர்களுக்காக உறவும் சுற்றமும் அள்ளிக் குவிக்கும் பரிசுப் பொருட்களும் அதை பெற்றுக் கொண்ட பூப்பெய்த பெண்ணின் பெற்றோர் அதற்கு கைமாறாக சட்டி சட்டியாக சோறு ஆக்கி வீடு வீடாக கொடுத்து வரும் அவல நிலை- காது குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் கூட மிகவும் ஆடமபரமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
எல்லா நிலையிலும் ஏழைகள்தான் பாதிக்கப் படுகிறார்கள் அவர்கள் வீட்டில் செய்தார்களே நாமும் ஏதாவது செய்யத்தானே வேண்டும் என்று கடன்களை வாங்கி செய்கிறார்கள் பின்பு அந்த கடனை அடைக்க வங்கியில் கடன் வாங்குகிறார்கள் பின்பு வங்கிக்கு வட்டி கட்ட முடியாமல் திண்டாடுகிறார்கள்.
பணக்காரர்களான மல்லையாவும் நீரஜ் மோடியும் வெளி நாட்டுக்கு இலேசாக தப்பி போய் விடலாம். சாமானியர்கள் என்ன செய்வார்கள் .வசதி படைத்தவர்கள் நபி வழியில் நின்று சிந்திக்க வேண்டும் திருமணத்தில் சிறந்தது செலவால் குறைந்த திருமணம்தான் என்று நபிகள் நாயகம் சொல்வதாக மேடையில் முழங்குகிறார்கள். மேடையை விட்டு கீழே இறங்கியதும் அந்த நபி மொழிக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுகிறது. நன்மையை ஏவுவது மட்டுமல்ல தீமையை விலக்கவும் வேண்டும் செலவுகளை குறைக்கவும் வேண்டும்....
KUNTHUM KHAIRA UMMATHIN UKHRIJATH LINNAAS...THAUMUROONA BIL MAUROOFI VA THANHAUNA ANIL MUNKAR என்று அல்லாஹ் திருமறையில் சொல்வதை கொஞ்சம் நினைத்து பார்த்து நமது எல்லா வைபவங்களிலும் ஆடம்பரங்களை தவிர்த்துக் கொண்டால் நல்லது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross