Re:... posted bymackie noohuthambi (dubai)[28 April 2018] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46151
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். நேற்று அபூ தாபி சமீப காலத்தில் பிரசித்தி பெற்ற பள்ளி வாசலில் ஜும்மா தொழுகை முடித்து விட்டு வெளியே சென்றபோது சகோதரர் மகபூல் அவர்கள் இந்த சிறுவனின் நோய் பற்றி சொன்னார்கள் மனம் கனத்தது
ஹாபிழ் களின் உடலை நரகம் தீண்டுவதில்லை அவர் பத்து நபர்களுக்கு சொர்க்கத்துக்கு சிபாரி செய்யும் தகுதியை பெற்றவர்கள் என்ற செய்தியை உலமாக்கள் சொல்வார்கள். எனவே அவர்கள் பெற்றோர்கள் இந்த செய்திகளை நம்பி பொறுமை கொள்ளுங்கள். இந்த இளம் வயதில் ஒரு மகனை இழப்பது எவ்வளவு வேதனை தரும் செய்தி என்பதை நினைத்துப் பார்க்கும்போது அடி வயிற்றில் அமிலம் சுரக்கிறது.
அல்லாஹ்வின் கட்டளையை ஏற்றுக் கொண்டு பெற்றோர்கள் உற்றார்கள் ஸபூர் செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு இதை விட மேலானதை தருவதற்கு காத்திருக்கிறான் என்பதுதான் உண்மை. நபிகள் நாயகம் அவர்களும் அப்படித்தான் து ஆ கேட்கும்படி நமக்கு ஆணை இட்டுள்ளார்கள்.
அல்லாஹ் இந்த இளம் வயது ஹாபிழ் அவர்களின் மண்ணறையை சுவர்க்கப் பூங்காவாக்கி வாய்ப்பானாக மேலான சுவர்க்கத்தை தங்குமிடமாக்கி வைப்பானாக பெற்றோர்களுக்கு நல்ல பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross