அற்ப நேரத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னே நம் மனதை இழுத்துச்சென்று விட்டது... posted bySK Shameemul Islam (Chennai)[19 June 2018] IP: 122.*.*.* India | Comment Reference Number: 46191
மாஷா அல்லாஹ், சகோதரர் முஷ்தாக்கின் 'நம் தோட்டமும் பூ பூக்கும்....' கட்டுரை அற்ப நேரத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னே நம் மனதை இழுத்துச்சென்று விட்டது.
அஹ்மத் காக்காவின் 'ரகசிய போர்வாள் ரஸீன் அமீர்' (அது வேறொன்றும் இல்லை, உமர் முக்தார் புத்தகத்திற்கு வைக்கப்பட்ட ரகசிய பெயர்) மஜ்லிஸுல் புஹாரிஷ் ஷரீபின் தோட்டத்தில் வைத்து மாலை நேர மயான அமைதியில் கேட்கும்போது நம்மை இத்தாலியின் முசோலினியின் படைக்கெதிராகவே நிலைநிறுத்திவிடும்.
பள்ளிக்கூடத்திலோ..., பெல்லடித்து இரண்டு நிமிடம் தாமதமாக வந்தாலே கோல்ராஜ் சாரின் நார் பிரம்பு பதம்பார்க்கும்.
ஹாமிதிய்யாவின் நூலகத்தை (அக்காலங்களில்) அங்கு மாணவர்களாக இருந்தவர்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். ஒரு வகுப்பில் குறைந்தது இருவராவது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகை முடித்து மதிய உணவு உண்ட பிறகு நடைபெறும் சொற்பயிற்சி மன்றத்தில் பேசவேண்டும். பேசுவதற்கு தலைப்பும் தரப்படும். அதற்கு ஏற்றாற்போல் புத்தகம் அங்குள்ள நூலகத்தில் இருந்து முந்தைய வாரமே எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறாக மாணவர்களை ஊக்குவிப்பதில் ஒய்.யூ.எப். சங்கத்தின் செயலாளர் முஹ்யித்தீன் காக்காவின் பங்கு மகத்தானது.
அக்காலம் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வழியமைத்தது. இக்காலமோ அதை உணர்ந்து பார்க்கக்கூட இயலாத நிலைமைக்கு நம் இளைய தலைமுறையினரை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது.
அன்று ஒருவர் மனதை மற்றவர் இலகுவாக புரிந்துகொள்ளும் நிலைமை இருந்தது; ஆனால் இன்று சின்னஞ்சிறு விசயத்திற்கே சகிப்புத்தன்மை இழந்து காணும் ஒரு சமூகம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross