செய்தி: நோன்புப் பெருநாள் 1439: ஜூன் 16 சனிக்கிழமை நோன்புப் பெருநாள்! மஹ்ழரா – ஜாவியா - நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...உலமாக்களின் கூட்டறிக்கை posted bymackie noohuthambi (kayalpatnam)[15 June 2018] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46190
இன்று பகல் ஒரு செய்தி வந்தது. நாகர்கோயிலில் பிறை கண்டதாகவும் அதை ஊர்ஜிதப்படுத்தி தகவல் தருமுன் நமது உலமாக்கள் கலைந்து சென்று விட்டதாகவும் அந்த செய்தி சொல்கிறது.
நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று அவரிடம் கேட்டேன். எனது கணவர்தான் அதை சொன்னார்கள் அப்படியானால் என்ன செய்ய என்று கேட்டேன் நான் நோன்பு வைக்கவில்லை நீயும் நோன்பு வைக்க வேண்டாம் என்று எனது கணவர் சொன்னார். அப்படியானால் நீங்கள்தான் அல்லாஹ்விடம் பதில் சொல்லவேண்டும் நான் கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்தேன் என் மீது குற்றமா
நீங்கள் என்ன செய்தீர்கள் என்று என்னிடம் அந்த பெண்மணி கேட்டார்கள் நான் சொன்னேன் 32 உலமாக்கள் கையெழுத்திட்டு கூட்டறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். நான் நோன்பு வைப்பதற்கு அவர்களே சாட்சி.
அல்லாஹ்வை அஞ்சி அவர்கள் கண் துஞ்சாது நோன்பு திறந்தும் திறக்காமல் அவசரமாக ஒரு இடத்தில கூடி பல இடங்களுக்கும் தொடர்பு கொண்டு ஊர்ஜிதப்ப படுத்தியபிறகுதான் இந்த கூட்டறிக்கை வெளியிடுகிறார்கள். எனவே இதில் ஒரு எள் அளவும் சந்தேகப் பட வாய்ப்பில்லை.
எனவே அல்லாஹ் எங்களுக்கு இந்த நல்ல வாய்ப்பை தந்தான் முழுமையாக நோன்பின் பலனை எங்களுக்கு தருவான். அமல் செய்வதில் ஆர்வம் வரவேண்டுமே தவிர அதை குறைத்துக்கொள்ள குறுக்கு வழிகளை தேடாதீர்கள். நீங்கள் கடந்த 29 நாட்கள் செய்த அமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறானா என்று கவலைப் பட்டு அதிகம் அதிகம் பாவமன்னிப்பு தேடிக் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு புத்தி மதி கூறி அனுப்பினேன்.
லா தௌபீக்க இல்லா பில்லாஹ்.
அல்லாஹ் நம் உலமாக்களுக்கு ரஹ்மத் செய்வானாக,
எல்லோருக்கும் எனது ஈகை திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross