Re:...மூன்றெழுத்து மந்திரம் posted bymackie noohuthambi (kayalpatnam )[09 August 2018] IP: 223.*.*.* India | Comment Reference Number: 46242
திராவிட முன்னேற்ற கழகம் திமுக
திருக்குவளை முத்துவேல் கருணா நிதி. திமுக
இரு அதிசயமான வசனங்கள். ஒரு கட்சியின் பெயரின் சுருக்கமும் அந்த கட்சியின் தலைவரின் பெயரின் சுருக்கமும் இப்படி அமைந்திருப்பது அதிசயம்தான். அதியசயமே அசந்து விடும் அதிசயம் கலைஞர்
ஆட்சி பொறுப்பில் இருப்பதுதான் தனக்கு சுமையான ஒன்று மற்றெல்லாம் சுவையானதும் சுகமானதும்தான் என்று சொல்கிறார் கலைஞர். அப்படி ஒரு சுமையான ஆட்சிப் பொறுப்பில் சட்டமன்ற நிகழ்ச்சிகளில் அவர் பங்குகொள்ளும் எதிர்க்க கட்சியினரின் கடுமையான கேள்விக் கணைகளுக்கும் நகைச்சுவையாக பதிலளிக்கும் அற்புத ஆற்றல் மிக்கவர்.
உங்கள் ஆட்சி பாசிஸ்ட் ஆட்சி என்கிறார் ஹண்டே.
பாசயிஸம் என்று சொல்லுங்கள் என்கிறார் கலைஞர்.
இது மூன்றாம் தரமான ஆட்சி என்கிறார் ஹண்டே. இப்போதும் அதே நகைச்சுவையுடன் கலைஞர் சொல்கிறார்.
இல்லை இது நான்காம் தரமான ஆட்சி ஆமாம் சூத்திரர்கள் ஆட்சி.
இன்னும் எவ்வளவோ சொல்வதற்கு இருக்கிறது.
இறுதியாக தி ஹிந்து தமிழ் தலையங்கம் சொல்வதுபோல்
எல்லா அரசியல்வாதிகளை போல கருணாநிதியும் தவறுகள் இழைத்தார். விமர்சனங்களை எதிர்கொண்டார். ஊழல் குடும்ப வாரிசு அரசியல் குற்றச்சாட்டுக்கள் அவருடைய இறுதிக் காலத்தில் அவருடைய புகழை குலைத்தன பெரியார் அண்ணா வழியில் அவற்றையும் அவர் தவிர்த்திருந்தால் அவருடைய இடம் இன்னும் உயர்ந்திருக்கும்.
தெற்கே இருந்து பிறந்த சூரியன் உலகமெங்கும் நிறைந்திருக்கும். கலைஞரும் மனிதன்தானே.
நீங்கள்தான் கடவுளை நம்பவில்லையே நீங்கள் எப்படி கடவுளை நம்பும் முஸ்லிம்களை நம்புகிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் முஸ்லிம்கள் உள்ளங்களில் என்றும் நிலைத்து நிற்கும்.
நான் கடவுளை நம்பாவிட்டாலும் கடவுளை நம்புகிறவர்களை நம்புகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross