Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:07:35 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20823
#KOTW20823
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 7, 2018
திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1883 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திராவிட முன்னேற்றக் கழகம் – திமுகவின் தலைவரும், தமிழகத்தை 5 முறை முதலமைச்சராக இருந்து ஆட்சி செய்தவருமான – முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி இன்று 18.10 மணியளவில், சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 95.

இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் அழிக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த அவர், கடந்த ஆண்டு வயது மூப்பு காரணமாக – உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது இல்லத்திலும், மருத்துவமனையிலும் என தேவைக்கேற்ப தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

அவரது உடல், நாளை சென்னை மெரினா கடற்கரையில், அண்ணா சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என அக்கட்சியினரால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுவரை முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by nizam (India ) [08 August 2018]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 46241

தலைவா நீ இறக்கவில்லை விதைத்திருக்கிறாய் தளபதி எனும் தலைவனாய்

தி மு க எனும் இயக்கமாய் எழுந்திருக்கிறாய்

இடஒதுக்கீடு எனும் உயிர் மூச்சாய் பரந்து விரிந்துள்ளாய்

தங்க தமிழாய் தழைத்தோங்கியுள்ளாய்

சமைத்துவபுரமாய் சங்கமித்துவுள்ளாய்

அண்ணாவின் ஆற்றலாய் ஐக்கியப்பட்டுள்ளாய்

காப்பீட்டு திட்டமாய் காவியமாகி உள்ளாய்

பெண்ணுக்கு சொத்துரிமையாய் பொக்கிஷமாகிவிட்டாய்

நீதி கேட்டு நெடிய பயணமாய் பதிந்துவிட்டாய்

சிறுபான்மை உரிமையாய் சிறகடித்து கொண்டு இருப்பாய ்

இலவச மின்சாரமாய் தமிழ் நெஞ்சங்களில் பாய்ந்து கொண்டு இருப்பாய்

உழுதவனுக்கு நிலமாய் நிறைந்திருப்பாய்

நீ மறையவில்லை
மலையாய் ஓங்கி வளர்ந்துள்ளாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...மூன்றெழுத்து மந்திரம்
posted by mackie noohuthambi (kayalpatnam ) [09 August 2018]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 46242

திராவிட முன்னேற்ற கழகம் திமுக
திருக்குவளை முத்துவேல் கருணா நிதி. திமுக

இரு அதிசயமான வசனங்கள். ஒரு கட்சியின் பெயரின் சுருக்கமும் அந்த கட்சியின் தலைவரின் பெயரின் சுருக்கமும் இப்படி அமைந்திருப்பது அதிசயம்தான். அதியசயமே அசந்து விடும் அதிசயம் கலைஞர்

ஆட்சி பொறுப்பில் இருப்பதுதான் தனக்கு சுமையான ஒன்று மற்றெல்லாம் சுவையானதும் சுகமானதும்தான் என்று சொல்கிறார் கலைஞர். அப்படி ஒரு சுமையான ஆட்சிப் பொறுப்பில் சட்டமன்ற நிகழ்ச்சிகளில் அவர் பங்குகொள்ளும் எதிர்க்க கட்சியினரின் கடுமையான கேள்விக் கணைகளுக்கும் நகைச்சுவையாக பதிலளிக்கும் அற்புத ஆற்றல் மிக்கவர்.

உங்கள் ஆட்சி பாசிஸ்ட் ஆட்சி என்கிறார் ஹண்டே. பாசயிஸம் என்று சொல்லுங்கள் என்கிறார் கலைஞர்.

இது மூன்றாம் தரமான ஆட்சி என்கிறார் ஹண்டே. இப்போதும் அதே நகைச்சுவையுடன் கலைஞர் சொல்கிறார்.

இல்லை இது நான்காம் தரமான ஆட்சி ஆமாம் சூத்திரர்கள் ஆட்சி.

இன்னும் எவ்வளவோ சொல்வதற்கு இருக்கிறது.

இறுதியாக தி ஹிந்து தமிழ் தலையங்கம் சொல்வதுபோல்

எல்லா அரசியல்வாதிகளை போல கருணாநிதியும் தவறுகள் இழைத்தார். விமர்சனங்களை எதிர்கொண்டார். ஊழல் குடும்ப வாரிசு அரசியல் குற்றச்சாட்டுக்கள் அவருடைய இறுதிக் காலத்தில் அவருடைய புகழை குலைத்தன பெரியார் அண்ணா வழியில் அவற்றையும் அவர் தவிர்த்திருந்தால் அவருடைய இடம் இன்னும் உயர்ந்திருக்கும்.

தெற்கே இருந்து பிறந்த சூரியன் உலகமெங்கும் நிறைந்திருக்கும். கலைஞரும் மனிதன்தானே.

நீங்கள்தான் கடவுளை நம்பவில்லையே நீங்கள் எப்படி கடவுளை நம்பும் முஸ்லிம்களை நம்புகிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் முஸ்லிம்கள் உள்ளங்களில் என்றும் நிலைத்து நிற்கும்.

நான் கடவுளை நம்பாவிட்டாலும் கடவுளை நம்புகிறவர்களை நம்புகிறேன்.

இதுதான் கலைஞர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved