காயல்பட்டினம் புறவழிச் சாலை – உப்பளம் நீரோடையில் அமைந்துள்ள மஹான் காட்டு பக்கீர் வலிய்யுல்லாஹ் அவர்களின் அடக்கத்தலத்தில் ஆண்டுதோறும் கந்தூரி நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழமை.
நிகழாண்டின் நிகழ்ச்சிகள், ஹிஜ்ரீ 1439 துல்கஃதா 17ஆம் நாள் – 31.07.2018. செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது.
அன்று காலையில், நபிகள் நாயகம் புகழ்பாடும் மவ்லித் மஜ்லிஸும், திக்ர் மஜ்லிஸும் – பிரபு முஹம்மத் இப்றாஹீம் தலைமையில் நடைபெற்றன. மாலையில் கொடியேற்றம் நடைபெற்றது.
இரவு அமர்விற்கு, காயல்பட்டினம் மஸ்ஜித் ஷெய்கு ஸலாஹுத்தீன் – மேலப்பள்ளி இமாம் மவ்லவீ எம்.டீ.ஷெய்க் அப்துல் காதிர் ஸூஃபீ தலைமையேற்க, எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ், எஸ்.எம்.முஹம்மத் மல்கான் முஹ்யித்தீன், எஸ்.எம்.காஜா முஹ்யித்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மஹ்ழரா அரபிக் கல்லூரியின் திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் ஹாஃபிழ் எஸ்.எச்.ஷேக் தாவூ் கிராஅத் ஓதினார். தாயிம்பள்ளி இமாம் ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக் வரவேற்றார்.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ – மஹான் அவர்களது வாழ்க்கைச் சரிதத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்.
காட்டுப் பக்கீர் வலிய்யுல்லாஹ் தர்ஹா நிர்வாகி எம்.எஸ்.சித்தீக் ஹஸன் நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இதில் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது.
தகவல் & படங்கள்:
ஜெஸீமுத்தீன்
|