காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவிலுள்ள ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளியில் அமைந்துள்ள மஹான் ஹாஃபிழ் அமீர் வலிய்யுல்லாஹ் அவர்களின் மண்ணறை. இங்கு ஆண்டுதோறும் மஹான் அவர்களின் பெயரில் நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், 369ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள் ஹிஜ்ரீ 1433 - துல்கஃதா பிறை 01 (14.07.2018.) அன்று கொடியேற்றத்துடன் துவங்கி, பிறை 13 அன்று கந்தூரியுடன் நிறைவுற்றது.
பிறை 01 முதல் தினமும் அதிகாலை 05.00 மணி முதல் 07.00 மணி வரை கத்முல் குர்ஆன் ஓதி மஹான் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டதுடன், மஹான் அவர்களின் புகழ்மாலை மர்ழிய்யாவும் ஓதப்பட்டது.
துல்கஃதா பிறை 14 - 28.07.2018 அன்று மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் மவ்லித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகைக்குப் பின் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸும் நடைபெற்றது.
இஷா தொழுகைக்குப் பின் மஹான் அவர்களின் வாழ்க்கைச் சரித உரையை, காயல்பட்டினம் பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் ஜும்ஆ பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ நிகழ்த்தினார்.
தொடர்ந்து - கந்தூரியை முன்னிட்டு அன்று காலையில் நடைபெற்ற திருக்குர்ஆன் மனனப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு – பள்ளி நிர்வாகிகளால் பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.
துஆ ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. மறுநாள் அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை – பள்ளி தலைவர் எம்.கே.எல்.ஷாஹுல் ஹமீத், துணைத் தலைவர் ஏ.எம்.எஸ்.அஹ்மத் முஹ்யித்தீன், செயலர் எம்.ஒய்.பீர் கான், துணைச் செயலாளர்களான எம்.கே.அப்பாஸ் ஷாஹுல் ஹமீத், பி.இப்றாஹீம், பாடகர் எஸ்.ஏ.இஸ்மாஈல், ஒய்.பஷீர் அஹ்மத், ஏ.பாதுல் ஹஸன், எம்.எம்.பத்ருத்தீன், பொருளாளர் பி.இப்றாஹீம் தாரிக் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
ஜெஸீமுத்தீன்
|