காயல்பட்டினம் நகராட்சி சார்பில், 6 பணிகளுக்கு 31 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளதாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவலறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில், 31.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், கீழ்க்காணும் 6 பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரி - தினத்தந்தி நாளிதழில் நகராட்சி விளம்பரம் வெளியிட்டுள்ளது.
ஒப்பந்தப்புள்ளிக்கான அட்டவணையை நேரில் - ஆகஸ்ட் 23, 2018 மாலை 4 மணி வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும், நிரப்பப்பட்ட ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் - ஆகஸ்ட் 24, 2018 அன்று மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும், பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள், ஆகஸ்ட் 24, 2018 அன்று மாலை 3:30 அளவில் திறக்கப்படும் என்றும் 2.8.2018 தேதியிட்ட அந்த விளம்பரம் தெரிவிக்கிறது.
ஒப்பந்தப்புள்ளி படிவங்களை நகராட்சி இணையதளத்தில் (http://123.63.242.116/kayalpattinam/Tender%20notice%20and%20scheduled.html) இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இன்றைய தேதி வரை - படிவங்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தப்புள்ளிகள் கூறப்பட்டுள்ள பணிகள் விபரம் வருமாறு:
(1) காயல்பட்டினம் நகராட்சி குடிநீர் விநியோகப்பணியில் பொன்னங்குறிச்சி தலைமை நீரேற்றும் நிலையத்தில் அமைக்கப்பட்ட குளோரினேசன் பிளான்டிற்கு குளோரின் சிலிண்டர்கள் விநியோகம் செய்தல்
மதிப்பீட்டு தொகை 1.25 லட்சம்
(2) காயல்பட்டினம் நகராட்சி குடிநீர் விநியோகப்பணியில் உச்சி மகாளி அம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்ட குளோரினேசன் பிளான்டிற்கு குளோரின் சிலிண்டர்கள் விநியோகம் செய்தல்
மதிப்பீட்டு தொகை 1.25 லட்சம்
(3) தாயிம்பள்ளி சந்திப்பு மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. சந்திப்பு ஆகிய இரு இடங்களில் உள்ள உயர் கோபுர மின் விளக்குகளை பழுது பார்த்து பராமரிப்பு பணி செய்தல்
மதிப்பீட்டு தொகை 4.20 லட்சம்
(4) நகராட்சி ஆடு அடிக்கும் தொட்டி வளாகத்தில் தனியாக புதிய ஷெட் அமைத்தல்
மதிப்பீட்டு தொகை 5.00 லட்சம்
(5) நகராட்சியில் கடையக்குடி (நில அளவை எண் 278/1B) உரக்கிடங்கு இடத்திற்கு செல்லும் புதிய அணுகு சாலையில் இரு புறமும் புதியதாக தெருவிளக்கு அமைத்தல்
மதிப்பீட்டு தொகை 9.90 லட்சம்
(6) நகராட்சி உரக்கிடங்கு அமைந்துள்ள கடையக்குடி நில அளவை எண் இடத்தில் மின் விளக்கு வசதி செய்தல்
மதிப்பீட்டு தொகை 9.90 லட்சம்
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஆகஸ்ட் 4, 2018; 9:30 pm]
[#NEPR/2018080401]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |