குவைத் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் எம்.எச்.முஹம்மத் நூஹ் ஸாஹிப் உடைய தந்தை – காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த எம்.ஏ.எஸ்.முஹம்மத் ஹஸன், நேற்று (02.08.2018. வியாழக்கிழமை) 22.45 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 78. அன்னார்,
மர்ஹூம் முஹம்மத் அபூபக்கர் ஸித்தீக் அவர்களின் மகனும்,
மர்ஹூம் முஹம்மத் அபூபக்கர் அவர்களின் மருமகனாரும்,
மர்ஹூம் தைக்கா செய்யித் அஹ்மத் அவர்களது மருமகனும்,
எம்.ஏ.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர், எம்.ஏ.எஸ்.ஷாஹுல் ஹமீத் ஆகியோரின் சகோதரரும்,
எம்.எச்.முஹம்மத் அபூபக்கர் ஸித்தீக், குவைத் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் எம்.எச்.முஹம்மத் நூஹ் ஸாஹிப் ஆகியோரின் தந்தையும்,
எம்.எஃப்.கிதுரு முஹம்மத் என்பவரது மாமனாரும்,
எஸ்.எச்.முஹம்மத் அபூபக்கர் ஸித்தீக், எஸ்.எச்.ஷேக் சுலைமான் லெப்பை ஆகியோரது பெரிய தந்தையும்,
கே.எம்.முஹம்மத் ஹஸன் ஃபாரூக், எம்.ஏ.எஸ்.முஹம்மத் ஹஸன், எம்.என்.எஸ்.முஹம்மத் ஹஸன் ஆகியோரது பாட்டனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று மஃரிப் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
‘மெகா’ நூஹ்
|