காயல்பட்டினம் நகர மக்களுக்கு பல்லாண்டுகளாக மருத்துவ சேவையாற்றிய – சேவையாற்றி வருகிற மருத்துவர்களை கண்ணியப்படுத்தும் வகையில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், 19.08.2018. ஞாயிற்றுக்கிழமையன்று பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. அதே நிகழ்ச்சியில் – குழுமத்தின் அவசர மருத்துவ உதவித் திட்டமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் பூர்விக, மூத்த மருத்துவர்களை கௌரவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி - இறைவன் நாடினால் - ஆகஸ்ட் 19 ஞாயிறு அன்று, ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC) வளாகத்தில் - நடப்பது என்ன? குழுமம் ஏற்பாட்டில் - நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் - காயல்பட்டினம் சார்ந்த, காயல்பட்டினம் மக்களுக்கு பல ஆண்டுகளாக மருத்துவ சேவையாற்றி வரும் மூத்த மருத்துவர்கள் கண்ணியப்படுத்தப்படவுள்ளனர்.
மேலும் - கடந்த பிப்ரவரி மாதம், நடப்பது என்ன? குழுமம் ஏற்பாட்டில், மருத்துவர்கள் பங்கேற்போடு நகரில் நடைபெற்ற அவசர மருத்துவ உதவி (EMERGENCY MEDICAL CARE) குறித்த கூட்டத்தில் பெறப்பட்ட ஆலோசனைகள் அடிப்படையில், நடப்பது என்ன? குழுமம் வடிவமைத்துள்ள அவசர மருத்துவ உதவி திட்டம் - இறைவன் நாடினால் - அறிமுகப்படுத்தப்படவுள்ளது..
இந்நிகழ்ச்சிகள் குறித்த கூடுதல் விபரங்கள் - இறைவன் நாடினால் - விரைவில் வெளியிடப்படும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 27, 2018; 9:30 pm]
[#NEPR/2018072702]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|