காயல்பட்டினம் நகராட்சியின் டெங்கு ஒழிப்பு பணிக்கு 36 தற்காலிக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், சுமார் 2 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மாத ஊதியமாக அவர்களுக்கு வழங்கப்படுவதாகவும், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் – தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி பகுதிகளில் - சில பெண்கள், வீடு வீடாக சென்று - கிணறுகளில் மருந்து ஊத்துவது உட்பட சில பணிகளை செய்து வருவது கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இது குறித்து விசாரித்ததில் நகரில் டெங்கு ஒழிப்புக்கு பணியமர்த்தப்பட்டுள்ளவர்கள் அவர்கள் என தகவல்கள் தெரிவித்தன.
தற்போது - நடப்பது என்ன? குழுமம் சார்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் சில விபரங்கள் - இது சம்பந்தமாக - பெறப்பட்டுள்ளன.
நகராட்சி மூலம் வழங்கப்பட்ட பதிலில், இந்த பணியாளர்கள் - 20.5.2014 முதல் பணியாற்றி வருவதாகவும், 10 பணியாளர்கள் என துவக்கத்தில் இருந்த எண்ணிக்கை தற்போது 36 பணியாளர்கள் என உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் - இவர்கள் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி, தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும். நகராட்சி தரப்பில் பதில் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் - ஒவ்வொரு பணியாளருக்கு சுமார் ரூபாய் 8000 என - மாதத்திற்கு, இவ்வகைக்கு சுமார் ரூபாய் 2,42,000 செலவு செய்யப்படுவதாகவும், நகராட்சி தெரிவிக்கிறது.
பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர்கள் பெயர்கள் வருமாறு:
(நகராட்சி தரப்பில் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது; பாதுகாப்பு கருதி முகவரி வெளியிடப்படவில்லை)
(1) எம்.உமா (காயல்பட்டினம்)
(2) ஏ.அனிதா (காயல்பட்டினம்)
(3) ஜெ.தேவி (திருச்செந்தூர்)
(4) எம்.பைட்டம்மாள் (காயல்பட்டினம்)
(5) ஆர்.சுடலை வடிவு (காயல்பட்டினம்)
(6) எம்.சுமதி (காயல்பட்டினம்)
(7) பி.மல்லிகா (காயல்பட்டினம்)
(8) எம்.ராதா (காயல்பட்டினம்)
(9) ஆர்.கறுப்பி (காயல்பட்டினம்)
(10) பி.ஆறுமுகக்கனி (கோவில்விளை)
(11) எம்.அன்னபுஷ்பம் (காயல்பட்டினம்)
(12) வி.பேச்சியம்மாள் (காயல்பட்டினம்)
(13) எஸ்.சுமதி (காயல்பட்டினம்)
(14) எஸ்.பாமா (காயல்பட்டினம்)
(15) எம்.முத்து லட்சுமி (காயல்பட்டினம்)
(16) பி.கலா (காயல்பட்டினம்)
(17) எஸ்.ராமுத்தாய் (ஆறுமுகநேரி)
(18) எஸ்.சண்முகமாலா (காயல்பட்டினம்)
(19) வி.மாரியம்மாள் (காயல்பட்டினம்)
(20) எம்.சகுந்தலா (காயல்பட்டினம்)
(21) எஸ்.கோமதி (காயல்பட்டினம்)
(22) ஆர்.பேச்சியம்மாள் (காயல்பட்டினம்)
(23) எம்.முத்தாரம்மாள் (காயல்பட்டினம்)
(24) பி.சண்முகவடிவு (காயல்பட்டினம்)
(25) எஸ்.இசக்கியம்மாள் (காயல்பட்டினம்)
(26) பி.லீலா (திருச்செந்தூர்)
(27) எஸ்.ஜாஸ்மீன் (காயல்பட்டினம்)
(28) எம்.மாரியம்மாள் (காயல்பட்டினம்)
(29) ஆர்.செல்லம்மாள் (காயல்பட்டினம்)
(30) எஸ்.மாரியம்மாள் (திருச்செந்தூர்)
(31) ஏ.தங்கலட்சுமி (காயல்பட்டினம்)
(32) சி.ராமச்சந்திரன் (காயல்பட்டினம்)
(33) ஜீ.முருகம்மாள் (காயல்பட்டினம்)
(34) எம்.பத்மினி (காயல்பட்டினம்)
(35) எல்.மாயாண்டி (காயல்பட்டினம்)
(36) ஸ்வீட்லீன் பாக்கியவதி (ஆறுமுகநேரி)
மாதம் வாரியாக செலவுசெய்யப்பட்ட தொகை, பணியமர்த்தப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆகிய தகவல்கள் வருமாறு:-
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூலை 31, 2018; 9:00 pm]
[#NEPR/2018073101]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|