காயல்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஜூலை மாதம் 26, 27, 28 ஆகிய மூன்று நாட்களில் நடைபெற்ற ‘இயற்கையைத் தேடி’ எனும் தலைப்பிலான மூலிகைத் திருவிழாவில், நகர பள்ளிகளின் மாணவ-மாணவியர் உட்பட திரளானோர் பங்கேற்றுள்ளனர். விரிவான விபரம்:-
தமிழக அரசின் – இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஏற்பாட்டில், ‘இயற்கையைத் தேடி’ எனும் தலைப்பில் மூலிகைத் திருவிழா, காயல்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஜூலை மாதம் 26, 27, 28 (வியாழன், வெள்ளி, சனி) ஆகிய மூன்று நாட்களில் நடைபெற்றது.
துவக்க நாளன்று நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில, தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி மருத்துவர் இராஜசெல்வி, திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரி ஃபாத்திமா பர்வீன், காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்களான ஆல்பர், கோகிலா (பொறுப்பு), ஆத்தூர் மருத்துவர் முத்தமிழ்ச் செல்வி, காயல்பட்டினம் மருத்துவர் முருக பொற்செல்வி ஆகியோர் கலந்துகொண்டு, வாழ்த்துரையாற்றினர்.
ஒவ்வொரு நாளும் 07.30 மணி முதல் 12.00 மணி வரையிலும், மீண்டும் 15.00 மணி முதல் 17.00 மணி வரையிலும் மூலிகைத் திருவிழா நடைபெற்றது. இதில், நகர பள்ளிகளின் மாணவ-மாணவியர் உட்பட திரளானோர் கலந்துகொண்டு, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மூலிகைகள், மூலிகைச் செடிகள், இயற்கை வாழ்வியலின் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகளைப் பார்த்துச் சென்றனர்.
|