சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப் பள்ளி மாணவர்கள் – 31.07.2018. செவ்வாய்க்கிழமையன்று நகரில் விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர்.
பள்ளி தலைமையாசிரியர் பி.செய்யித் அப்துல் காதிர் முன்னிலையில், தாளாளர் வாவு எம்.எம்.மஸ்னவீ. செயலாளர் ஏ.எச்.நெய்னா ஸாஹிப் ஆகியோரிணைந்து பேரணியைத் துவக்கி வைத்தனர். ஜூனியர் ரெட் க்ராஸ், ஸ்கவுட் மாணவர்கள் பேரணியை ஒருங்கிணைத்தனர்.
இப்பேரணியில், ஞெகிழிப் பயன்பாட்டைத் தவிர்த்தல், மரம் வளர்ப்பதன் மகத்துவங்கள் குறித்த வாசகங்களை உள்ளடக்கிய பதாகைகளை பள்ளி மாணவர்கள் கைகளில் ஏந்திச் சென்றனர்.
|