காயல்பட்டினம் நகர மக்களுக்கு பல்லாண்டுகளாக மருத்துவ சேவையாற்றிய – சேவையாற்றி வருகிற மருத்துவர்களை கண்ணியப்படுத்தும் வகையில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், 19.08.2018. ஞாயிற்றுக்கிழமையன்று பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. அதே நிகழ்ச்சியில் – குழுமத்தின் அவசர மருத்துவ உதவித் திட்டமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (MEGA) ஏற்பாட்டில் - இறைவன் நாடினால் - ஆகஸ்ட் 19, 2018 ஞாயிறு அன்று - காயல்பட்டினம் மண்ணிற்காக தங்களை அர்ப்பணித்த மூத்த மருத்துவர்கள் கௌரவிப்பு நிகழ்ச்சி (YEOMAN AWARDS FOR EXEMPLARY MEDICAL SERVICES) மற்றும் அவசர மருத்துவ உதவி திட்டம் (MEDICAL EMERGENCY RESPONSE PROJECT) அறிமுகம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளது.
ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC) மைதானத்தில் மாலை 4:30 மணியளவில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் 20 மூத்த மருத்தவர்களின் காயல்பட்டினம் மண்ணிற்கான சேவைகள் நினைவு கூறப்படவுள்ளது.
மேலும் - இந்நிகழ்ச்சியின் போது - அவசர காலங்களில் பொது மக்கள் மருத்துவ உதவி பெற உதவிடும் திட்டமும் முறையாக - இறைவன் நாடினால் - அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொள்ள -
டாக்டர் M.பரீதா ஷிரின் M.B.B.S.
(Joint Director of Health Services, Thoothukudi)
டாக்டர் M.கீதா ராணி M.B.B.S.,D.P.H.,M.P.H.,D.B.E.
(Deputy Director of Health Services, Thoothukudi)
டாக்டர் M.S.அஷ்ரப் M.D.
(Former President, Tamil Nadu Medical Council)
ஆகியோர் இசைவு தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்:-
பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பித்திட, அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஆகஸ்ட் 5, 2018; 9:00 am]
[#NEPR/2018080501]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|