காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப் பள்ளியில் – தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி, 04.08.2018. சனிக்கிழமையன்று 15.00 மணியளவில் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் பி.செய்யித் அப்துல் காதிர் தலைமை தாங்கி, நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் – தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பதாலும், சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்காத பொருட்களைப் பயன்படுத்துவதாலும் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
அடுத்த சில நாட்களில் - தம் வீடுகளிலும், சுற்றுப் புறங்களிலும் கண்களில் படும் – தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களைப் பொறுப்புணர்வுடன் சேகரித்துக் கொண்டு வருவோருக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படும் எனவும் அவர் அப்போது அறிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். |