செய்தி: லட்சக்கணக்கானோரது கண்ணீருக்கிடையே கலைஞர் மு.கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம்! காயல்பட்டினத்தில் கடைகள் அடைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...என் உயிரும் மேலான உடன்பிறப்புக்களே posted bymackie noohuthambi (kayalpatnam)[09 August 2018] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46243
இன்னி விரலால் சூரியனை மறைக்கப் பார்க்கிறார்கள். கலைஞரின் உடலை வேறு எங்கும் அடக்கிவிட்டால் அவரது சுவாசம் அடங்கியதுபோல் அவருடைய செல்வாக்கும் அடங்கிவிடும் ஓரத்தில் ஒதுங்கிவிடும் என்று நினைத்தவர்கள் இப்படி ஒரு இமாலய தவறை செய்திருக்கவும் தேவை இல்லை, இப்படி மூக்குடைபட்டு போயிருக்கவும் தேவை இல்லை, விநாச காலே விபரீத புத்தி.
உலகமே உற்று நோக்கி மூக்கில் விரல் வைத்து பார்க்கும் அதிசயம் நிகழ்ந்து இருக்கிறது.
மரணம் எல்லோருக்கும் சம்பவிக்கும் ஒரு நிகழ்ச்சிதான். கடவுளை நம்பினாலும் நம்பாவிட்டாலும் ஆண்டவனே இல்லை என்று ஆர்ப்பரித்தாலும் அவர்கள் பேச்சை இறைவன் லட்சியம் செய்வதில்லை. ஏனெனில் அவன் தான் எல்லோரையும் படைத்து பரிபாலித்து உணவளித்து பின் தன் பக்கம் அழைத்துக் கொள்பவன்.
தான் பாசத்துடன் பெற்று வளர்த்த பிள்ளை தன்னை அலட்சியம் செய்தாலும் எந்த தந்தையும் அவனை வெறுப்பதில்லை. கடுகளவாவது தந்தை மகன் பாசம் இருக்கவே செய்யும். அப்படி இருக்கும்போது உலகெலாம் படைத்தது ஆட்சி செய்யும் இறைவன் அவர்களை கடிந்து கொள்வதில்லை. மாறாக மற்ற பிள்ளைகளுக்கு செய்யும் உதவியைவிட இவர்களுக்கு அதிகமாகவே செய்கிறான்.
விவிலியத்தில் வரும் கதைபோல் THE PRODIGAL SON என்றே இறைவன் அவர்களை நினைத்துக் கொள்வான். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களை கடவுளுக்கும் மேலாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் அதுதான் வேதனைக் குரியது.
நீதிபதிகள் இந்த இக்கட்டான நிலையிலும் தங்கள் தீர்ப்புக்களை மனித நேயத்துடன் வழங்கி கலைஞரை கௌரவத்திருக்கிறார்கள். சட்டங்களை பார்க்காமல் சரித்திரத்தை பார்த்திருக்கிறார்கள். மத்திய அரசு இந்திய தேசிய கொடியையே அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டது. கலைஞரின் உடலை போர்த்தியிருந்த தேசிய கொடியை அவரது மகனிடம் ஒப்படைத்தது இன்னொரு மைல் கல்
ஆனாலும் புரட்சி தலைவி அவர்களை மெரினாவில் நல்லடக்கம் செய்தது கூடாது என்று வழக்கு தொடுத்தவர்களை அந்த வழக்குகளை வாபஸ் பெறுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்கள். அரசியல் சாணக்கியம் என்பது எல்லோருக்கும் கைவந்த கலை ஆகி விடாது. எப்படியோ அண்ணாவின் சமாதி அருகே கலைஞர் அடக்கம் செய்யப் பட்டு விட்டார்.
49 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாவின் மறைவின் போது அண்ணாவின் சமாதிக்கருகில் நின்று கலைஞர் சூளுரைத்தபடி அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்றிருந்து அதை மீண்டும் அவர் காலடியில் கொண்டு சேர்த்து விட்டார். ஆனால் கலைஞரின் இதயம் இப்போது அவரது தொண்டர்களின் இதயங்களுடன் கலந்து நிற்கிறது.
கலைஞரின் சமாதியில் அந்த மெரினாவின் வீதியிலே கருணாநிதியின் சமாதியில் வருவோர் போவோர் எல்லோரும் படித்து செல்லும் வாசகமாக....''என் உயிரிலும் மேலான என் அன்பு உடன்பிறப்புக்களே'' என்ற வாசகம் பொறிக்கப்பட வேண்டும் அதுதான் திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கு என்றென்றும் உற்சாகம் தரும் ஒரு அமுத மொழி, தங்க பஸ்பம். தாரக மந்திரம்.....
தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்த வேண்டுகோளை இந்த இணயதளம் மூலம் சமர்ப்பிக்கிறேன். ....
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross