Re:...நீங்கள் பொருளீட்டும் மாநிலத்தின் துயர் துடைக்க என்ன செய்தீர்கள்> posted bymackie noohuthambi (kayalpatnam)[02 September 2018] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46264
இங்கே சொல்லப்பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் சிறப்பாக சொல்லப் பட்டிருக்கிறது. கேரள மாநிலத்தில் கால் ஊன்றி அந்த மாநிலத்தில் பொருளீட்டி சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் சில வருடங்களுக்கு முன் அங்கு வந்தபோது கண்கூடாக கண்டேன்.
கடவுளின் தேசம் என்று மற்றவர்கள் அந்த மாநிலத்தை புகழ்ந்தாலும் பூமியில் எல்லா நாடும் கடவுளின் தேசம்தான் என்பதுதான் முஸ்லிம்களின் நம்பிக்கை. ஆனாலும் சில மாநிலங்கள் சில நாடுகள் நமக்கு குளிர்ச்சிதரும் மாநிலமாக நாடாக இருப்பதால் அதை சிலாகித்துக் கூறுகிறோம் .
இலங்கையில் வாழ்பவர்கள் இலங்கையைத்தான் இறைவனின் தேசம் என்று சொல்வார்கள். இப்போது கடவுளின் தேசம் ஏன் கை பிசைந்து நிற்கிறது மக்கள் நிர்கதியாகி இருக்கிறார்கள் பல ஆயிரம் கோடிகள் நஷ்டம் என்றும் மீட்பு பணிக்கு பல்லாயிரம் கோடிகள் தேவை படுகிறது என்று முதல்வர் கூறுகிறார்.இந்த நேரத்தில் மீட்புப் பணிக்கு தேவையான பொருளாதாரத்தை அள்ளி வழங்கவேண்டியது காயல்பட்டினத்துக்கு அல்ல. கேரளாவில் காயப்பட்டவர்களுக்கு.
காயல் நல மன்றம் உடனடியாக ஒரு கணிசமான தொகையை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி தாங்கள் வாழும் மாநில முதல்வரின் அங்குள்ள மக்களின் இதயத்தில் இடம் பிடிக்க வேண்டும்.
உதவி வரைத்தன்று உதவி உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்து
உதவி யாருக்கு செய்கிறோம் என்பது பெரிதல்ல எப்படிப் பட்ட நேரத்தில் அந்த உதவியை செய்கிறோம் என்பதில்தான் உதவியின் உண்மையான மதிப்பு தெரிய வரும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross