கேரளா மாநிலம் ~ மலபார் காயல் நல மன்றத்தால் (மக்வா) நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தில், மன்றத்திற்குப் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அவ்வமைப்பின் நிகழ்வறிக்கை:-
*மலபார் காயல் நல மன்றத்தின் (மக்வா) 22 வது பொது குழு*
12.08.2018 ஞாயிற்றுகிழமை மாலை 5 மணிக்கு கோழிக்கோட்டில் M.K.நெய்னா முஹம்மது அவர்களின் வீட்டு மாடியில் வைத்து சிறப்பாக நடை பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்....
*அதன் நிகழ் முறைகளும் தீர்மானங்களும்*
*கிராஅத்*
ஆரம்பமாக கண்ணூர் MG.செய்யிது இபுராஹிம் அவர்களின் மகனார் அப்துல் கெளது அவர்கள் அழகிய குரலில் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளை துவக்கி தந்தார்.
*வரவேற்புரை*
மன்ற செய்தி தொடர்பாளர் S.N. மீரான் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றதுடன், நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.
*தலைமை*
நம் மன்றத்தின் துணை தலைவர் M.A.உதுமான் அப்துல் ராஜிக் அவர்கள் தலைமை ஏற்று நடத்தி தந்தார்.
மக்வாவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள MG.செய்யுது இபுறாஹிம் கண்ணூர் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து, தலைமை ஏற்று நடத்த கேட்டுகொண்டார். மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நம்முடைய பொதுக்குழுவில் அதிகமானவர்கள் பங்கெடுக்கவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து இன்ஷா அல்லாஹ் இனி வரும் பொதுக்குழுக்களில் அனைவர்களையும் பங்கெடுக்க செய்யக்கூடிய முயற்சியை நாம் அனைவரும் சேர்ந்து முயற்சிக்கவேண்டும் என்றும் கூட்டத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்
அடுத்த வருடம் நடைபெற இருக்கும் மன்றத்தேர்தலில் அதிக ஆர்வத்துடன் பங்கெடுத்து, நம் மன்றத்தை மேலும் நல்ல முறையில் கொண்டு செல்ல வேண்டும் என் கேட்டு கொண்டார்.
தலைமையுரை..
புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட MG.செய்யிது இபுறாஹிம் தமது உரையில் மிகவும் சந்தோஷமாக உள்ளது, என்னுடைய ஒத்துழைப்புகள் எப்போம் இருக்கும் என்றும் நீங்கள் அனைவரும் எல்லா விஷயங்களிலும் ஆர்வத்துடன் பங்கு பெற வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
*துணை செயலாளர் உரை*
அதை தொடர்ந்து மன்ற துணை செயலாளர் ASI. முஹம்மது ஸிராஜ் அவர்கள் கடந்த கூட்டத்தின் மினிட் ல் வாசித்து கூட்டத்தின் அங்கிகாரம் பெற்றுக் கொண்டார்.கடந்த பொதுகுழுவிற்கு இந்த பொதுகுழுவிற்கும் இடைபட்ட நிகழ்வுகளை விளக்கி கூறினார். புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட விபரங்களையும், செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது பற்றியும் விபரமாக எடுத்துரைத்தார்.
*கணக்குத்தாக்கல்*
பொருளாளர் S.சேக் சலாவுதீன் அவர்கள் கடந்த பொதுகுழு முதல் இந்த பொதுகுழு வரை உள்ள கணக்குகளை தாக்கல் செய்தார்.
அவர் தனது உரையில் பொருளாதார நெருக்கடி மிகுந்த இந்த சூழ்நிலையில் நம் மன்ற உறுப்பினர்கள் சிறப்பான பங்களிப்பு செய்து வருவதை பெருமையுடன் குறிப்பிட்டார்.எல்லா நேரங்களிலும் நான் தொடர்பில் எளிதாக இருப்பதாகவும் அதனால் உங்கள் பங்களிப்புகளை சிறப்பாக பெற்று நல்ல ஆதரவுடன் செயலாக்கம் இருப்பதாகவும் தெரிவித்தார்
*ஷிஃபா & மக்கள் மருந்தகம் ~ தற்போதைய நடைமுறை விளக்கம்*
அடுத்ததாக நம் மன்றத்தின் செயற்குழு உறுப்பினரும், ஷிஃபாவின் நமது அறங்காவலருமாகிய M.A.K.முஹம்மது உஸ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அவர் தமது உரையில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஷிஃபாவின் செயல்பாடுகள் மிக சிறப்பாக அமைந்துள்ளது. உதவி கடிதங்கள் முழு பரிசோதனை செய்தவுடன் உடனுக்குடன் உதவிகள் வழங்கபடுவதாகவும் குறிப்பிட்டார்.
மக்கள் மருந்தகத்தில் தற்போது 90% மருந்துகள் கிடைக்கின்றது. முடிந்த அளவிற்கு மக்கள் மருந்தகத்தின் மருந்துக்களை பயன்படுத்துங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
நம் மக்வாவின் முன்னாள் தலைவர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் சிறப்பாகா பணியாற்றியது பற்றியும் இப்போது அவர் சொந்த அலுவல்கள் காரணமாக இந்த பொறுப்பில் இருந்து விலகியது பற்றியும் , மேலும் புதிய தலைவர் தேர்ந்தெடுத்தது பற்றியும் விரிவாக பேசினார்
🥇பரிசளிப்பு நிகழ்ச்சி🥇
எல்லா வருடங்கள் போல் இந்த வருடம் SSLC, +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற உறுப்பினர்களின் மக்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜித்தா காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் அரபி முஹம்மத் ஷுஅய்ப் அவர்கள் சிறப்பு விருந்தினரக பங்கு பெற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.
*உறுப்பினர்களின் கருத்து பரிமாற்றம்*
உறுப்பினர்கள் தங்களின் சந்தேகங்களை நல்ல முறையில் எடுத்து வைக்க .... M.A.K.உஸ்மான் விளக்கம் கொடுத்தார்.
*நன்றியுரை*
இறுதியாக பொதுக்குழு உறுப்பினர் SA. பாதுல் அஸ்ஹப் அவர்கள் நன்றி கூற அனைவரின் தூஆ பிராத்தனையுடன் கூட்டம் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
கலந்து கொண்ட அனைவருக்கும் சுவை மிகு காயல் கறி கஞ்சியும், வடையும் , பறிமாறப்பட்டது. அனைவரும் ஆர்வத்துடன் பங்குபெற்று வாழ்த்தி , தூஆ செய்து சென்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்வா சார்பாக...
தகவல் & படங்கள்:
S.N.மீரான்
செய்தி தொடர்பாளர், மக்வா.
|