காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில், 28.08.2018. செவ்வாய்க்கிழமை) 09.00 மணி முதல் 17.00 மணி வரை -
மாதாந்திர பராமரிப்பு மின்தடை செய்யப்படுமென மின் வாரியத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி அன்று 09.00 மணிக்கு மின்தடை செய்யப்பட்டது. ஆனால் 17.00 மணிக்கு மீண்டும் மின்தடை நீக்கப்படவில்லை. அறிவிக்கப்படும் நேரத்தை விட சுமார் 30 நிமிடங்கள் வரை பிற்படுத்தியேனும் மின்தடை நீக்கப்படும் ‘வழமை’யையும் தாண்டி, இரவுக்கு இருட்டிய பிறகும் மின்தடை தொடர்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனர்.
இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம் பொதுமக்கள் பலர் முறையிட்டதைத் தொடர்ந்து, அக்குழுமம் சார்பில் மின்வாரியத்தில் வினவியபோது, பராமரிப்புப் பணிகளில் எதிர்பாராத தாமதம் ஏற்பட்டுவிட்டது காரணமாகக் கூறப்பட்டதோடு, 20.00 மணிக்குள் மின்தடை நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
20.10 மணியளவில் மின்தடை நீக்கப்பட்டு, மின் பகிரப்பட்டது. ஆனால், கொச்சியார் தெருவிலுள்ள இரண்டு மின் கம்பிவடங்களுக்கிடையே மரக்கிளை இணைந்து விழுந்ததையடுத்து, மீண்டும் மின் பகிர்வு தடைபட்டது. பின்னர் பழுதுகள் சரி செய்யப்பட்டு, சில நிமிடங்களுக்குப் பின் மீண்டும் மின் பகிரப்பட்டது.
|