கேரளாவில் அண்மையில் பெய்த தொடர் கனமழை காரணமாக மாநிலமெங்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் பலியாயினர். பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் பொருளிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்பாட்டில் நிவாரண நன்கொடைத் தொகை, பொருட்கள் தமிழகமெங்கும் சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், காயல்பட்டினம் நகர முஸ்லிம் லீக் சார்பில், கடந்த ஹஜ் பெருநாளுக்கு முந்திய வெள்ளிக்கிழமையன்று (17.08.2018.) ஜும்ஆ தொழுகைக்குப் பின், நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் நன்கொடை சேகரிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, ஹஜ் பெருநாளன்று (22.08.2018. புதன்கிழமை) மாலையில் காயல்பட்டினம் கடற்கரையில் பொதுமக்கள் திரண்டபோது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் – அதன் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் தலைமையில், அதன் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ. மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், நகர பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் உள்ளிட்ட கட்சியினர் பொதுமக்களிடம் வாளியேந்தி நிதி சேகரித்தனர். பொதுமக்கள் தன்னார்வத்துடன் மனமுவந்து இவ்வகைக்காக தாராளமாக நிதியுதவி செய்தனர்.
இவ்வாறாக, தூத்துக்குடி மாவட்டம் உட்பட – மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெறப்பட்ட நிதியுதவி, பொருட்கள் ஆகியன – கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேர்ப்பிக்கப்பட்டது. இதுகுறித்து, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘மணிச்சுடர்’ நாளிதழில் வெளியான செய்தி:-
வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர், காயல்பட்டினம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து சேகரிக்கப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்களை கேரள முன்னாள் அமைச்சரும் – இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலமச்சேரி சட்டமன்ற உறுப்பினருமான இப்றாஹீம் குஞ்சு எம்.எல்.ஏ.விடம், எர்ணாகுளம் பத்தடிப்பாலம் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை வெளி வளாகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ. வழங்கினார்.
தூத்துக்குடியிலிருந்து - அரசி 3 டன், கடலை 1/2 டன், ஆடைகள் 1000 செட், சோப்பு 1000, நாப்கின் 1000, லுங்கி 300, ப்ளீச்சிங் பவுடர் 150 கிலோ, பிஸ்கட், பேஸ்ட், மருந்துப் பொருட்கள்,
காயல்பட்டினத்திலிருந்து 1000 லுங்கிகள்,
ஈரோட்டிலிருந்து 1000 பெட்ஷீட்டுகள், அரைக்கால் சட்டைகள் 250, லுங்கிகள் 100,
திருப்பூரிலிருந்து நைட்டி 300, பெண்கள் உள்ளாடைகள் 2500, அரிசி 1 1/2 டன், ப்ளாஸ்டிக் வாளி 300, ப்ளாஸ்டிக் ஜக் 300, பெட்ஷீட் 400, லுங்கி 400, துண்டு 300, அலுமினிய பாத்திரம் 300, குழந்தைகள் உடை 1500, ஆண்கள் பனியன் 1000, அரிசி மாவு 50 கிலோ, பருப்பு 50 கிலோ, குழந்தைகளுக்கான பள்ளிப் பை 160, நாப்கின் 300 ஆகிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் மங்களம் இப்றாஹீம், மாவட்ட துணைச் செயலாளர் ரஃபீஉத்தீன், இளைஞரணி மாநில செயலாளர் ஸிராஜுத்தீன், மாணவரணி மாநில துணைத் தலைவர் கே.அப்பாஸ், இளைஞரணி மாவட்ட தலைவர் முஸ்தஃபா, தாஹா நஸீர், வடுகன்காளிப்பாளையம் மாணவரணி மாவட்டத் தலைவர் ரஹ்மத்துல்லாஹ், கிளைச் செயலாளர் இப்னு ஷுஹத், மஜீத், அர்ஷத், முஹம்மத் அலீ, திருப்பூர் 48ஆவது வார்டு செயலாளர் இப்றாஹீம், மாணவரணி மாவட்டப் பொருளாளர் மன்ஸூர், நவ்ஷாத், மங்களம் மாணவரணி அப்துல் வஹ்ஹாப், இளைஞரணி அபூதாஹிர், தவ்ஃபீக், அப்துர்ரஹீம் உள்ளிட்டோர் இதன்போது உடனிருந்தனர்.
வெள்ள நிவாரணப் பணிகளைப் பார்வையிட்டு ஆறுதல்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ., மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்டப் பொருளாளர் திரேஸ்புரம் கே.மீராசா, தூத்துக்குடி அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளான ஐஸ்வர்யா கன்ஸ்ட்ரக்ஷன் ஃபுர்கான் அலீ, ஷாஹுல் ஸிராஜுத்தீன், முஹம்மத் ரஃபீக், ஷேகம்மாள், சுலைமான், காஜா, முஹம்மத் குட்டி, பாபு உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட - குஞ்சுன்னிக்கர, உளியன்னூர், கடுங்கள்ளூர், ஆளுவா மார்க்கெட், தலமச்சேரி 12ஆவது வார்டு, தலமச்சேரி மருத்துவக் கல்லூரியருகிலுள்ள பகுதிகள், 12ஆம் வார்டு காலனி, எச்.எம்.டீ. எஸ்டேட் வார்டு, பத்தடிப்பாலம் உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
கடுங்கள்ளூர் பஞ்சாயத்து தலைவர் ரெஸ்னம்மா சுரேஷ், வி.எஸ்.அபூபக்கர், அப்துல்லாஹ் புக்காலி, கொச்சி ஃபஸல், கங்ஙரப்படி ஜுபைர், வைக்கம் ஸைஃபுத்தீன் உள்ளிட்டோர் இதன்போது உடனிருந்தனர். அனைத்து ஏற்பாடுகளையும் வைக்கம் செய்யித் முஹம்மத் ஒருங்கிணைத்துச் செய்திருந்தார்.
இவ்வாறு அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப் & எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ
|