Re:...அல்லாஹ்வின் திருமறையும் நபிகள் நாயகம் அவர்களின் வழிமுறையும் posted bymackie noohuthambi (colombo)[04 January 2019] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46355
150 ஆண்டுகளை ஒரு மத்ரஸா எட்டிப் பிடிப்பதென்பது ஒரு சாதாரண விஷயமல்ல. தரீக்காக்களும் மத்ஹபுகளும் தழைத்தோங்கி நின்ற காலங்களில் அவ்வளவு சிரமப்பட்டிருக்க மாட்டார்கள் நமது முன்னோர்கள். இப்போது வேலியே பயிரை மேய்வதுபோல் உலமாக்களே தரிக்காக்களுக்கும் மதுஹபுகளுக்கும் எதிராக கருத்து தெரிவித்து மக்கள் உள்ளங்களில் ஒரு சந்தேக பார்வையை ஏற்படுத்தி இருக்கும் இந்த காலத்தில் அந்த சவால்களுக்கு முகம்கொடுத்து தங்கள் வாதங்களை சரியென்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உலமாக்கள் இருக்கிறார்கள்.
முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்களை ராஜாஜி சந்திக்கப் போகும்போது, முஹம்மது அலி ஜின்னாஹ் சொல்வாராம் பார்ப்பான் வாரான், அவன் வர முன்னாடி அவனது கேள்விகளுக்கு சரியான விடைகளை சொல்ல நான் தயாராக இருக்க வேண்டும் அந்த சட்ட நூல்களை என்னிடம் தாருங்கள் என்று அவரது உதவியாளர்களிடம் கட்டளை விடுவாராம். இருவருமே சட்டம் பயின்றவர்கள். சட்டங்களின் நெளிவு சுளிவுகளை தெரிந்தவர்கள். ஆனாலும் ராஜாஜி கேட்கும் கிடுக்குப் பிடிக்கு பதில் சொல்லவேண்டும் என்ற ஒரு விதம்புரியாத அச்சம் ஜின்னாவுக்கு இருந்ததுண்டு.
அந்த காலம்தான் இப்போதுள்ள காலம். மார்க்க அறிஞர்களே குர் ஆன் ஹதீது வெளிச்சத்தில் தரிக்காக்களையும் மதுஹபுகளையும் சாடுகிறார்கள். குர் ஆன் ஹதீதை விட்டால் வேறு எங்கிருந்து இவர்களுக்கு மறுப்பு தெரிவிக்க முடியும் என்று மாற்று அணியில் உள்ள உலமாக்கள் இன்னும் வேகமாக ஆழமாக திருமறையையும் திருநபி வழிமுறையையும் ஆராய ஆரம்பித்திருக்கிறார்கள்.
இது ஒரு நல்ல முன்னேற்றம்தான். ஷைத்தான் ஆயத்துல் குர்ஸியை ஓத கற்றுக்கொடுத்தான்என்ற நபிமொழியையும் நபித்தோழர் வரலாற்றையும் மறுக்க முடியுமா? யாரோ ஒரு புறம்போக்கு பேசுகிறான் என்று ஒதுக்கி தள்ளிவிட்டுப் போக முடியவில்லை .
அல்லாஹ்வின் திருமறை நபிகள் நாயகத்தின் வழிமுறை நபித்தோழர்களின் நெறிமுறை இந்த மூன்று விஷயங்களில் பிடிப்போடு இருந்து அதில் சமரசம் செய்து கொள்ளாமல் இருக்கும் காலமெல்லாம் இத்தகைய மத்ரஸாக்கள் நிலை பெற்று நிற்கும்.இன்னி விரலால் சூரியனை மறைக்க முடியாது.
அந்த வரைமுறைகளை தாண்டி செல்லும்போது சந்தேக மேகம் சூழ்வதை தவிர்க்கவும் முடியாது. அவரவர்கள் தாங்கள் நேர்வழியில் இருக்கிறோம் என்று சொல்கிறார்கள் யார் நேர்வழியில் இருக்கிறார்கள் என்பதை அல்லாஹ்வே நன்கறிவான் என்ற திருமறை வசனம் இந்த சந்தேக மேகமூட்டத்தை கலைத்து நமக்கு தெளிவானதொரும் பாதையை காட்டி தரும். அல்லாஹ் நம் எல்லோருக்கும் அந்த ஹிதாயத்துடைய பாதையை காட்டி அருள் புரிவானாக.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொல்லேருழவர்களின் அருமையான மேடை பேச்சுக்களை செவியுறுவதற்கு ஆசை நிறைய இருந்தாலும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அங்கு வரும் பயணம் தடை பட்டுள்ளது. என்றாலும் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் இறுதி நாளின் இறுதி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும், இன்ஷா அல்லாஹ்..
விழாக்கள் சிறப்பாக நடந்து முடியவும் பட்டம் பெறும் மாணவர்கள் அல்லாஹ்வின் கட்டளை நபிகள் நாயகம் அவர்களின் வழிமுறையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு எங்கள் போன்றவர்களுக்கு நல்ல நஸீஹத்து வழங்க வாழ்வாங்கு வாழ்ந்து தீனுல் இஸ்லாமிய விழுமியங்கள் நாடெங்கும் பரப்புவதற்கு அருள் புரிவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross