செய்தி: இக்ராஃ நடத்திய ‘வெற்றிப் படிகள்’ வழிகாட்டு நிகழ்ச்சி – முதல் அமர்வு: நட்சத்திப் பேச்சாளர் கலியமூர்த்தி ஐ.பீ.எஸ். பங்கேற்று சிறப்புரை!! நகர பள்ளிகளின் மாணவ – மாணவியர் பெருந்திரளாகப் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும் அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன் தாயை சேரும்.... posted bymackie noohuthambi (kayalpatnam)[12 March 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46383
நீண்ட காலத்துக்குப் பிறகு kayalpatnam .com தந்துள்ள ஒரு அருமையான நிகழ்ச்சி தொகுப்பு.
உங்களது விமர்சனங்கள், தமிழ் வசனங்கள் கருத்துள்ள பாடல்கள் ஒன்றையும் காணோமே என்று எனது விசிறிகள் கேட்பார்கள்.
ஊரிலே சுமார் 7 இணையதளங்கள் இருந்தன, அங்கு எனது தமிழறிவை வளர்த்துக்கொள்ள எனக்கு தமிழ் ஆங்கிலத்திலுள்ள புலமையை வெளிப் படுத்த அவை பெரிதும் உதவியாக இருந்தன. எனக்கு ஒரு முகவரியை தந்ததே இந்த இணையதளங்கள்தான் . ஆனால் அவை எல்லாம் whattsupp முகநூல் என்ற ஒரு குறுகிய வட்டத்துக்குள் தங்களை சுருட்டிக் கொண்டன அங்கும்கூட தகவல் பரிமாற்றம் ஆதாரபூர்வமாக இல்லை. இந்த நிலையில் இந்த இணையதளம் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் சிலிர்த்தெழுந்து வந்துள்ளது பாராட்டுக்குரியது .
மார்ச் மாதம் பிறக்கும் முன் இந்த நிகழ்ச்சி தொகுப்பு வெளிவந்திருந்தால் எத்தனையோ தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு ஒரு நினைவூட்டலாக அமைந்திருக்கும்,
BETTER LATE THAN NEVER
மாணவ மாணவிகள் மட்டுமல்ல வயது முதிர்ந்தவர்களுக்கு கூட மிக உன்னிப்பாக காது தாழ்த்திக் கேட்டுக் கொண்டு கவனம் சிதறாமல் உள்வாங்கி கொண்டிருந்த ஒரு அற்புதமான நிகழ்ச்சி அது. திரு கலியமூர்த்தி அவர்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வித்துக்கள் மட்டுமல்ல முத்துக்கள். படிப்பில் ஆர்வம் காட்டவேண்டும் என்பதில் ஆரம்பித்த அவர் ''எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு'' என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வைரவரிகளை நினைவூட்டியது இறுதியில் ''தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது'' என்ற நபிகள் நாயகம் அவர்களின் அற்புத வழிகாட்டு நெறிவரிகளில் முடிந்தது. மேடையில் இருந்து இறங்கி வந்த அவர்களிடம் நான் கேட்டேன் இவ்வளவும் பேசினீர்கள், உங்கள் இளமையின் ரகசியம் என்ன என்பதை சொல்லவில்லையே என்றேன். அவர்கள் சிரித்துக் கொண்டு சொன்னார்கள்,
''ஒழுக்கமான வாழ்க்கை''.
நம் இளைஞர்களிடத்தில் மிகவும் அருகிப்போய் கருகிப்போய் உள்ள ஒரே விஷயம் இதுதான், ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் என்பான் வள்ளுவன்.. VA INNAKA LA ALAA KHULUQIN ALEEM என்று அல்லாஹ் நபிகள் நாயகத்தை விழித்துக் கூறுகிறான். அல்லாஹ்வும் அவனது ரசூலும் நம்மிடம் எதிர்பார்ப்பதும் அதைத்தான்.
ஒழுக்கம் உடையவர்களாக வாழ்வோம். வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிற்போம்.
வெற்றி மீது வெற்றி வந்து நம்மை சேரும்
அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் நம் பெற்றோரை சேரும் அவர்களை நமக்கு தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வை சேரும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross