செய்தி: புகாரி ஷரீஃப் 1440: சமய நல்லிணக்கம், உலக அமைதி, நிலையான நல்லாட்சி, நாட்டு நலனுக்காக அபூர்வ துஆ பிரார்த்தனை! பெருந்திரளானோர் பங்கேற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...தேன்மதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம் posted bymackie noohuthambi (kayalpatnam )[16 April 2019] IP: 223.*.*.* India | Comment Reference Number: 46391
இறை பிரார்த்தனை என்பது ஒரு காலத்தில் ஆலிம்கள் அரபியில் ஓதுவதும் கேட்பவர்கள் ஆமீன் என்று சொல்லுவதுமாகத்தான் இருந்தது. ஓதுபவர் என்ன சொல்கிறார் என்று யாருக்கும் புரியாமலிருந்தது. 92 வருடங்களுக்கு முன்பே இந்த நிலையை மாற்றி பிரார்த்தனைக்கு தமிழிலும் மொழி பெயர்ப்பு செய்து சாதனை படைத்தனர் நமது முன்னோர்கள்.
இந்த மாபெரும் சபையை ஏற்படுத்திய பெருந்தகைகளில் எனது தந்தை எங்கள் நினைவெல்லாம் நிறைந்து வாழும் ஹாஜி முஹம்மது மக்கி ஆலிம் சித்த்தீகி அவர்களின் தந்தை அ.வு . நூஹுத்தம்பி லெப்பை ஆலிம் ஹாபிழ் ஹாஜி அவர்களும் ஒருவர்
தினசரி ஓதப்படும் ஹதீதுகள் சுமார் 278 என்றாலும் நான்கு ஐந்து ஹதீதுகளை மட்டுமே தமிழாக்கம் செய்யப்பட்டு அன்றைய நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். அந்த ஐந்து ஹதீதுகளை உள்வாங்கி கொண்டு நாம் அதன்படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டாலே சுவர்க்கம் செல்வது மிக எளிது என்று நமது உலமாக்கள் சொல்லிக் காட்டுவார்கள்.
அந்த வகையில் இறுதிநாளன்று அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் அவர்கள் வழங்கிய தமிழ் மணம் கமழும் பிரார்த்தனை உலக நாடுகளில் உள்ள தமிழ் பேசும் நல்லுள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டிருக்கும். இணையத்தளத்தில் உலகம் முழுவதும் அதை கேட்டவர்கள் தமிழ் பொதிகை இங்கிருந்து தென்றலாய் மக்களை தழுவுவதை பார்த்திருப்பார்கள். தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்று தமிழ் கவிஞன் பாரதி பாடினான். அதை அவையில் அமர்ந்திருந்த அனிதா ராதாகிருஷ்ணன் என்ற தமிழ் மகனும் கேட்டு மகிழ்ந்திருப்பார்.
காய்தல் உவத்தல் அகற்றி எல்லோருக்குமான பிரார்த்தனையாக ஆலிம் அவர்கள் ஆற்றிய பிரார்த்தனை, இந்து முஸ்லீம் கிறிஸ்தவர் என்ற எல்லையை தாண்டி இந்த அகண்ட பாரதத்தின் முன்னேற்றத்துக்காக, விவசாயிகள் நோயாளிகள் ஆட்சியாளர்கள் எல்லோருக்குமான பிரார்த்தனையாக கடல்போல் விரிந்து வியாபித்திருந்தது. நடக்கின்ற ஆட்சிக்கும் இனி வரப்போகும் ஆட்சிக்கும் கட்டியம் கூறும் பிரார்த்தனையாக அமைந்திருந்தது பாராட்டத்தக்க ஒரு திருப்பம்.
நாம் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அதன் தலைமையை உருவாக்கக் கூடிய புதியதொரு விடியலை நோக்கி காலெடுத்து வைத்துக் கொண்டிருக்கும் இந்த நல்ல வேளையில் நாம் மற்றவர்களை விட ஒரு வித்தியாசமான கோணத்தில் இந்த தேர்தலை அணுகுகிறோம். அது தான் நாம் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அந்த பொறுப்பை விட்டு விட்டு வெறுமனே வாக்களிக்க மட்டும் செல்ல விருக்கிறோம். நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டுமே நமக்கு நல்லவர்களை ஆட்சியாளர்களாக அல்லாஹ் தருவான். நாம் அவனுக்கு மாறு செய்து வாழ்ந்தால் அவனும் நமக்கு மாறு செய்து விடுவான் என்ற அருமையான வாழ்வியல் தத்துவத்தை வெளியிட்டு தமது பிரார்த்தனையை முடித்துக்கொண்ட ஆலிம் அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக. ஆமீன்.
வாழ்த்துக்கள்.
ALLAAHUMMA LAA THUSALLITH ALAINAA MANN LAA YAKHAAFUKA VALAA YARHAMNAA ...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross