செய்தி: குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம்! நகர மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...MINORITIES RIGHTS DAY posted bymackie noohuthambi (kayalpatnam)[20 December 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46463
நமது நாட்டில் சிறுபான்மையோர் உரிமை நாள் டிசம்பர் 18 ம் திகதி வருடம்தோறும் அனுஷ்டிக்கப்படுகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
ஐக்கிய பேரவை நண்பர்கள் இந்த கூட்டத்தில் உரையாற்றியவர்கள் யாரும் அதை மேற்கோள் காட்டி பேசவில்லை.நாம் அறிந்தோ அறியாமலோ அந்த நாள் பொருத்தமாக அமைந்திருந்தது. குடியுரிமை சட்டமல்ல குடியுரிமை பறிக்கும் சட்டம். மக்கள் பெருந்திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது மனமகிழ்வை தருகிறது. நாடெங்கும் இந்த அலை இப்போது வீச ஆரம்பித்துள்ளது.
1965 ஹிந்தி எதிர்ப்பு போராட்ட நாள் நினைவுக்கு வருகிறது. நாங்கள் மாணவர்கள் கல்லூரியை புறக்கணித்து விட்டு வெளியில் சென்று ஆர்ப்பாட்டம் செய்தோம் எங்களுக்கு எங்கள் ஆசிரியர் ஒன்றை சொல்லி அனுப்பினார். போராடுங்கள் ஆனால் வன்முறையில் ஈடுபடுவது, கல்லெறிவது என்று உங்கள் போராட்டம் மாறுமானால் உங்கள் நோக்கம் திசை திருப்பபட்டு விடும் . நீங்கள் எதற்காக களம் இறங்கி போராடுகிறீர்களோ அந்த நோக்கம் நிறைவேறாது என்று சொல்லி அனுப்பினார்கள் நாங்களும் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டோம் ஆனாலும் அப்போதைய அரசும் சரி இப்போதைய அரசும் சரி உயிரிழப்புகள் கல்வீச்சுக்கள் பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்ட பிறகுதான் விழித்துக் கொள்கிறார்கள்
இந்த குடியுரிமை சட்டம் நிறைவேற்றுவதற்கு 12 தமிழர்கள்தான் காரணம் என்பது நன்றாக தெரிகிறது. அதிமுக உறுப்பினர்கள் , ராமதாஸ் போன்ற விவரம் தெரிந்தவர்கள் முஸ்லீம் என்ற பெயரில் வாழும் முஹம்மது ஜான் அவர்களும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டுப் போட்டிருந்தால் இந்த மசோதா தோல்வி அடைந்திருக்கும். தமிழக அரசு செய்த துரோகம்தான் மோடிக்கு கை கொடுத்தது
ஜூலியஸ் ஸீஸர் கேட்டாரே ..''.நீயுமா ப்ரூட்டஸ் ! அதிமுக கட்சி உறுப்பினர்களை விடுங்கள், ஒரு முஸ்லீம் இதற்கு ஆதரவாக ஒட்டு போடலாமா,,,,
முஹம்மது ஜான் ....''.நீயுமா ப்ரூட்டஸ்! .
இஸ்லாமிய சமுதாயம் உங்களை பார்த்து கேட்கிறது. விரோதிகளை நம்பலாம் துரோகிகளை நம்பலாமா ..
... . . .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross