செய்தி: குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து இ.யூ.முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில் கண்டனப் பொதுக்கூட்டம்! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இந்திய அரசியலமைப்பு பற்றிய தெளிவான கருத்துரைகள் posted bymackie noohuthambi (kayalpatnam)[20 December 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46464
முத்தான பேச்சாளர்களை இந்த கூட்டத்துக்கு அறிமுகப் படுத்திய முஸ்லீம் லீக் சகோதர்களுக்கு பாராட்டுக்கள்.
பேச்சுக்கள் ஆரம்பிக்கும்போதே தலைப்புக்கு வந்து பேசி இருந்தால் இன்னும் எவ்வளவோ சிறப்பாக இருந்திருக்கும் . குறுகிய நேரமே அனுமதிக்கப் பட்டிருப்பதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதை முன்கூட்டியே பேச்சாளர்களு சொல்லி இருக்க வவேண்டும்.
எனது நினைவுக்கு வரும் ஒரு செய்தி. ரியாத் கயல் நளமன்றத்தில் ஒரு கூட்டம். தலைவராக எனக்கு சொந்தமான ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார்கள் அவர் என்னிடம் வந்து மருமகனே நான் தலைவர் தலைமை உரை ஆற்ற வேண்டும் என்ன பேச வேண்டும் ஒன்றும் ஓடவில்லையே என்றார். நான் அவருக்கு சொன்னேன் ''ஏற்கெனவே நேரம் அதிகமாகிவிட்டதால் என் தலைமை உரையை சுருக்கி கொண்டு பேச்சாளர்களை பேச அழைக்கிறேன்'' என்று சொல்லுங்கள், தலைமை உரையும் சிறப்பாக முடியும். கூட்டமும் உங்களை புகழ்வார்கள் என்றேன் அப்படியே அவர் செய்து பாராட்டுக்களை பெற்று சென்றார்.
திரு ஷண்முகம் அவர்கள் இன்னும் பேசி இருக்க வேண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றி எப்படி பேசுகிறார் முஸ்லிம்கள் பற்றி இவ்வளவு செய்தியை ஒரு தமிழர் பேசுகிறாரா... திரு இனிகோ இன்னும் பேச மாட்டாரா என்றிருந்தது. .
முட்டாள்கள் ராஜ்யத்தில் மூளை உள்ளவர்களுக்கு வேலை இல்லை என்பார்கள் . அல்லாஹ் நமது ஒற்றுமைக்கு ஒரு பரீட்சை நடத்தி இருக்கிறான் இந்த தரம்கெட்டவர்களை நமக்கு ஆட்சியாளர்களாக தந்து. நாம் அதில் வெற்றி பெற்று விட்டோம் இனிமேல் தொடர்ந்து வெற்றிதான் இன்ஷா அல்லாஹ்.நாம் மோடியை குறை சொல்வதைவிட நமது தமிழக மக்களவை உறுப்பினர்கள் 12 பேரைத்தான் குறை சொல்ல வேண்டும். அவர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்த சட்டம் வந்தே இருக்காது.
எது எவ்வாறாயினும் 2020 ஜனவரி 22m தினத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்பதில் சந்தேகமில்லை. நமது அரசியலைப்பு சட்டம் மிக தெளிவாக்க உள்ளது என்பதை இந்த பேச்சாளர்கள் ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார்கள். நன்றி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross