செய்தி: ஒரே ஆண்டில் ஒன்றரை முறை உலகையே சுற்றி வந்த ஆணையர் வாகனம்! காயல்பட்டினம் நகராட்சியில் அதிசயம்!! “மெகா / நடப்பது என்ன?” செய்தி வெளியீடு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை. posted bymackie noohuthambi (kayalpatnam)[02 January 2020] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46471
எப்படியெல்லாம் நடக்கிறது மோசடி?
பல ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்துக்கு பொதுமக்களின் வருகை குறைவாக இருப்பதைப் பயன்படுத்தி, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண்களிடம் செலவு கணக்கு நோட்டில் கையெழுத்து வாங்கிவிட்டு கூட்டத்தை முடித்துவிடுவார்கள். 100 நாள் வேலை திட்டத்தில் பயனாளி என்ற கணக்கில், பயனாளிகள் அல்லாதவர்களுக்கு அடையாள அட்டையை வைத்துக்கொண்டு, வேலையே செய்யாதவர்களுக்கு வேலை செய்ததாக கணக்கெழுதி பணத்தை எடுத்துக்கொள்வார்கள்.
மேலும், தங்களுக்கு வேண்டியவர்கள், உறவினர்களை திட்டங்களின் பயனாளிகளாக தேர்வு செய்வது, திட்டங்களின் மூலம் நிதியை அளிப்பது போன்றவற்றையும் செய்வார்கள். ஆனால், இளைஞர்கள் பலர் தற்போது கிராம சபையில் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர்.
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கிராம சபை கூட்டத்துக்கு முன்பும், பின்பும் செலவு கணக்கு விவரங்களை ஊராட்சி செயலரிடம் கேட்டுப் பெறுகின்றனர். ஊராட்சியில் நடைபெறும் செலவு ரசீதையும் அவர்கள் கேட்டுப் பெறலாம் என்கிறார் வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜூ.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross