Re:..YOU, TOO , BRUTUS ? posted bymackie noohuthambi (kayalpatnam)[06 January 2020] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46472
ஜூலியஸ் சீசரை கொல்வதற்கு துணை நின்றவன் சீசரிஆருயிர் நண்பன் புரூட்டஸ்.
முஸ்லிம்களுக்கு அரணாக நின்று முஸ்லிம்களை அரவணைத்து செல்லும் அரசு இது. சிறுபான்மையினருக்கு ஒரு குறையும் வராது பார்த்துக் கொள்ளும் அரசு என்றெல்லாம் EPS OPS செல்லும் இடங்களிலெல்லாம் சொல்வது வழக்கம். முஸ்லிம்கள் இந்த கட்சிக்கு எப்படி ஆதரவு தெரிவிக்கலாம் என்று எல்லா முஸ்லிம்களும் நினைக்கும்படி செய்து விட்டார்கள். சண்டாளர்கள் . இதை உறுதி செய்த முஹம்மது ஜான் முஸ்லீம் ஜமாஅத் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். அன்வர் ராஜா அவர்கள் மகளும் மனைவியும் உள்ளாட்சி தேர்தலில் படு தோல்வி அடைந்ததை அன்வர் ராஜாவே சொல்லிக் காட்டி இருக்கிறார். காட்டிக் கொடுத்த துரோகிகள் 12 பேர்.
சீசரின் கதை படித்தவர்களுக்கு இது நன்கு புரியும். சில வெள்ளிக் காசுகளுக்காக சோரம் போய் யேசுநாதரை காட்டிக் கொடுத்தான் ஜோதாஸ் என்று கிறிஸ்தவர்கள் சொல்வார்கள் இதெல்லாம் கதை என்று நம்பியிருந்தவர்களுக்கு இப்படி நடந்திருக்கும் என்று நம்ப வைத்தது இந்த 12 அதிமுக அடிவருடிகள் . எத்தனை கோடிகளுக்கு இவர்கள் முஸ்லிம்களை காட்டி கொடுத்தார்கள் என்ற தகவல் வெகு விரைவில் தெரியத்தான் போகிறது .
இவர்கள் அந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்திருந்தால் இந்த சட்டமே வந்திருக்காது இத்தனை உயிரிழப்புக்கள் பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்காது .
கூட்டணி தர்மத்துக்காக இந்த மசோதாவை ஆதரித்தேன் என்று அன்புமணி ராமதாஸ் தன்னிலை விளக்கம் கொடுத்ததுடன் இந்த தமிழகத்தில் அந்த சட்டத்தை அமுல் நடத்தக்கூடாது என்று கோரிக்கையும் விடுத்துள்ளார் . விரோதிகளை நம்பலாம் அவர்கள் நம் எதிரே வந்து நமது நெஞ்சில் குத்துவார்கள் துரோகிகள் நமக்கு முதுகு புறமாக வந்து நாம் அசந்திருக்கும் வேளையில் முதுகில் குத்திவிட்டு ஓடிவிடுவார்கள். இவர்கள் யார் என்று அடையாளம் காட்டி விட்டார்கள் இனிமேலும் இவர்களுடன் உறவாடுவது இவர்களுக்கு வாக்களிப்பது எல்லாம் இஸ்லாமிய விரோத செயல்களாகவே கருதப்பட வேண்டும்.
அல்லாஹ்வை மட்டுமே நம்புவார்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். வெறும் சிட்டுக் குருவிகளை வைத்து பெரும் யானைப் படையை அழித்து ஒழித்தவன் அவன். வெறும் 313 பேர்களை வைத்து பெரிய படையையே புறமுதுகு காட்டி ஓடிட செய்து முஸ்லிம்களுக்கு வெற்றியை கொடுத்தவன் இந்த சதிகாரர்கள் செய்யும் சதிகளை முறியடிக்க எத்தனை நிமிடம் ஆகப் போகிறது.
''நாம் ஒன்றை செய்ய நினைத்தால் நாம் சொல்வதெல்லாம் ''ஆகி விடு'' என்பதுதான் உடனே அது ஆகிவிடும்'' என்று அல்லாஹ் சொல்கிறான். . அல்லாஹ்வை நம்பி அவனிடமே நமக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சொல்வோம். அவற்றிலிருந்து நிரந்தர பாதுகாப்பு தருவதற்கு அவனே போதுமானவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross