செய்தி: COVID 19: நாளை முதல் அரசு மருத்துவமனை இயங்கும்! சுகாதாரத் துறையின் தகவலை மேற்கோள் காட்டி “மெகா / நடப்பது என்ன?” தகவலறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...காயல்பட்டினத்தில் இயங்கி வரும் ஒரே இணையதளம் posted bymackie noohuthambi (kayalpatnam)[11 April 2020] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46502
நன்றி மீண்டும் வருக ..
நீண்ட நாட்களாக இயங்காமல் இருந்த இந்த இணையதள ஆசிரியர் மீது எனக்கு நேரடி தொடர்பு இருந்ததால் அவரிடம் கேட்டேன் ஏன் இந்த தேக்க நிலை? latest news தரும் நீங்கள் late news (மறைந்தவர்கள் செய்தி மட்டும் போடுகிறீர்கள் )என்ன நடந்தது என்று கேட்டேன் அவர் கொஞ்சம் பிஸி என்று சொன்னார். இப்போது மீண்டும் களத்துக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாடு காணாத ஊரடங்கு நான் எனது 70 அகவையை தாண்டி வந்திருக்கிறேன், இலங்கையிலும் இப்படி ஒரு ஊரடங்கை நான் பள்ளிக்கு செல்லும் காலத்தில் அனுபவித்திருக்கிறேன். ஆனாலும் இப்படி ஒரு கடுமையான கொடுமையான ஊரடங்கை நான் சந்தித்ததில்லை.
மத ரீதியாக நோய்கள் வருவதில்லை அது CAA சட்டங்கள்போல் இஸ்லாமியர்களை மட்டும் குறிவைத்து வரும் நோய்கள் அல்ல. நமது முதல்வர் அவர்கள் சொல்வதுபோல் ''நோய் நேரம் பார்த்து ஆள் பார்த்து வருவதில்லை. நோய் வந்துவிட்டால் அதை எப்படி நீக்குவது என்று யோசிக்க வேண்டும் மருத்துவர்களை அணுக வேண்டும் அவர்கள் சொல்படி அவர்கள் தரும் மருந்துகளை சாப்பிட வேண்டும்''. இன்னும் ஒன்று அவர் சொல்ல தவறியது நீங்கள் வணங்கும் இறைவனிடம் இந்த நோயிலிருந்து என்னையும் ஏன் குடும்பத்தையும் இந்த நாட்டு மக்கள் எல்லோரையும் நீ காப்பாற்று இறைவா என்று இரு கரம் ஏந்தி பிரார்திக்கவேண்டும்.
நமது நாடு ஆன்மீக நாடு. பல மதங்கள் இங்கு இருந்தாலும் அவரவர்கள் மதத்தை பின்பற்ற அவர்களுக்கு பூரண உரிமை உண்டு. ஆனாலும் மக்கள் நலம் கருதி அரசு சொல்லும் யோசனைகளை கேட்டு எல்லா மதத்தினரும் கட்டுப் பட்டு அவரவர்கள் மத அனுஷ்டானங்களை பொது வெளியில் செய்வதை நிறுத்திவிட்டு அவரவர்கள் வீட்டிலேயே அதை செய்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் இந்த நாட்டின் பிரதமர் இன்னும் அந்த இஸ்லாமிய மதத்தை - அந்த வெறுப்புணர்வை காட்டியே மக்களை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார். காயல்பட்டினத்தில் ஒருவருக்கு நோய் என்றால் அவரை மட்டும் தனிமைப்படுத்தலாம் அவர் வாழும் முழு தெருவையும் அதன் மக்களையும் தனிமைப் படுத்துவதில் நமது ஆட்சி தலைவருக்கு நமதூரின்மீது இப்படி ஒரு காழ்ப்புணர்ச்சி எப்படி ஏற்பட்டதோ தெரியவில்லை.
ஆட்சி தலைவரும் ஒரு மனிதர்தான் மனித நேயம் நிறைந்திருக்க வேண்டிய நமது ஆட்சி தலைவரே நமதூருக்கு எதிராக நமதூர் மக்களுக்கு எதிராக பல சட்டங்களை திணிக்கிறார் என்றால் நாம் என்ன செய்ய முடியும்.முஸ்லிம்களுக்கு ஆயுதம் ஏந்த தெரியாது என்பதல்ல அவர்களை இஸ்லாம் அப்படி வார்த்தெடுக்கவில்லை வளர்த்தெடுக்கவில்லை.
எங்களுக்கு சொல்லப் பட்டதெல்லாம் நபிகள் நாயகம் போதித்ததெல்லாம். உங்களுக்கு துன்பம் சோதனை வரும்போது பொறுமையாக இருங்கள் உங்களுக்கு இன்பம் வரும்போதும் நல்வாழ்வு வரும்போதும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் இதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம் . ''இறைவா எங்கள் பாவங்களால் இந்த சோதனையை நீ தந்திருந்தால் எங்களை மன்னித்து இந்த நோயை எங்கள் ஊரிலிருந்தும் இந்த நாட்டிலிருந்தும் நீ அகற்றி விடு எல்லோருக்கும் நீ நல்ல சுகத்தை கொடு'' என்று பிரார்த்திக்கிறோம்.
நோய் மதம் சார்ந்து வருவதல்ல அதை நீக்குவதற்கு மருந்து குடிக்கலாம் . மாலையில் கை தட்டுவதாலோ இரவில் விளக்கை அணைப்பதாலோ எந்த நோயும் நீங்கிவிடும் என்று எந்த ஆன்மீக தலைவரும் நமக்கு போதிக்க வில்லை. மாண்பு மிகு ஆட்சித்தலைவர் அவர்களும் இதற்கு விதி விலக்கல்ல எல்லோரையும் உங்கள் சொந்தம்போல் நேசியுங்கள் அவர்கள் துன்பங்களை நீக்க அல்லும் பகலும் பாடுபடுங்கள். காய்தல் உவத்தல் அகற்றி உங்கள் சேவை எல்லா மதத்தினரையும் வந்து அடையட்டும். இறைவன் உங்களுக்கும் நல்ல சுகத்தை தருவானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross