காலத்தின் கடமை! posted bykavimagan kader (dubai)[20 June 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5449
ஒட்டுமொத்த தமிழகத்தையும் சூறையாடிய ஒருவர், தனது
சொந்தக்கதை, சோகக்கதையோடு விட்டுவிடாமல், 214 கோடி
கலைஞர் டி.வி.க்காக லஞ்சம் வாங்கிய குர்ற்றச்சாட்டில்
திஹார் சிறையில் கம்பி எண்ணும் அருமைப்புதல்வி, மக்கள்
பணத்தில் கொட்டமடித்தத சங்கமம் நிகழ்ச்சி வரை, வேண்டாத
குப்பைகளை எல்லாம் பாடப்புத்தகத்தில் சேர்த்து வைத்திருப்பதை எண்ணி ஆதங்கப்படாத நண்பர்கள், எட்டாம் வகுப்பு வரை எல்லோரும் பாஸ் என்ற, உபயோகமான ஆனால் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டத்தையும் அம்மா கொண்டு வந்ததாக அடிக்கடி ஆதங்கப்படும் ஜியா காக்கா, இன்னும் இந்த விஷயத்தை விவாதிக்கும் நண்பர்களுக்கு!
இரண்டுமுறை அம்மா அவர்கள் ஆண்டபோதும் தமிழகத்தின் கல்வித்தரம் இரண்டு இரண்டு நிலைகள் உயர்ந்தது என்ற புள்ளிவிவரத்தை தயவுசெய்து மறந்து விடாதீர்கள்.
இரண்டு லட்சம் கோடிகள் கடன் சுமையை நம்மீது சுமத்திச்
சென்றிருக்கும் ஒரு மோசமான அரசை ஐந்தாண்டுகாலம்
பொறுத்துக்கொண்ட நீங்கள், ஒரு புதிய அரசு என்னதான்
செய்கிறது? அதன் முடிவு நன்மையிலா? தீமையிலா? என்பதை
எல்லாம் ஒரு மூன்று மாத காலமெனும் பொறுத்திருந்து
விமர்சனம் செய்தால் அது நியாயம்.
முள்மரத்தை வெட்டும்போது, நல்ல சில மூலிகை செடிகளும்
பலியாகிவிடுவது இயற்கை! அந்த வகையில் அம்மாவின்
நடவடிக்கைகள் காலத்தின் கடமை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross