Re:கடற்கரை மணற்பரப்பில் குப்... posted byvsm ali (Kangxi, Jiangmen, China)[12 July 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 5922
மிகவும் அவசரம் , அவசரமாக ஆரம்பிக்கப்பட்ட " கடற்கரை பயனாளிகள் சங்கம் " எங்கே போனார்கள் என்று தெரியவில்லை . ( வெளியூர்வாசி ஒருவர் கோடை நேரத்தில் அரைக்கால் சட்டை போட்டு வந்தார் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது . ) சாக்லேட் பேப்பரை , dust bin இல் போட, அதை தேடி அலைந்த அந்த மழலையை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்
.
இங்கு என் வீட்டிற்கு அருகில் ஒரு ஜூனியர் ஸ்கூல் . அங்கு சுத்தம் செய்யும் பணியாளர்கள் பலபேர் உள்ளனர். இருப்பினும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை , மாணவர்கள் அனைவரும் , ( ஏழை பணக்காரன் பாகுபாடு இன்றி ) தாங்கள் படிக்கும் பள்ளி , அதை முன்னோக்கியுள்ள தெரு ஆகியவற்றை சுத்தம் செய்கின்றனர். சுத்தம் செய்ய பயன்படும் பொருட்களை , தங்கள் வீட்டில் இருந்தே , வெட்கப்படாமல் எடுத்து வருகின்றனர். அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவரிடம், மாணவர்களை இது போன்ற காரியங்களில் ஈடுபடுத்தலாமா என்று கேட்டதற்கு , இதை இப்போதே , இங்கேயே பழகினால்தான் , நாளை பொது இடத்தை சுத்தமாக வைக்கும் எண்ணம் தோன்றும். ஒரு மாணவன் எங்கள் பள்ளியை விட்டு வெளியேறும்போது , இது போன்ற செயல்களையும் சேர்த்துதான் " conduct cerificate " வழங்குகிறோம். என்று சொன்னார். என் மனதிற்கும் சரியாகவே பட்டது.
நமது கடற்கரையில் குப்பை போட இடமே இல்லாத போது , யாரை குற்றம் சொல்லி என்ன பயன் ?
கஞ்சி கம்மாவும் , வாடா அப்பாவும் , கடற்கரையில் ஆங்காங்கே அமர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களை தேடிப்பிடித்தல்லவா , வியாபாரம் செய்கின்றனர். சாப்பிட்ட பின் , வாடிக்கையாளர் , பேப்பர் மற்றும் கழிவுகளை போட , குப்பை தொட்டியை தேடிப்பிடித்தா அலைய முடியும் ? வியாபாரம் செய்ய ஒரு குறிப்பிட்ட இடத்தை வரைமுறை படுத்தி, வாடிக்கையாளர்கள் அங்கு வந்துதான் சாப்பிட வேண்டும் என்று கட்டாயம் ஆக்கப்பட வேண்டும். அங்கு சேரும் குப்பைகளை அகற்றுவதற்கு , வியாபாரிகளிடம் ஒரு தொகையை கட்டணமாக வசூலிக்கலாம் என்பது என் கருத்து.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross