ஒரு சகோதரர் இவ்வாறு நினைவு கூறுகிறார்.......... posted byShameemul Islam SKS (Chennai)[12 July 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 5923
அவர்களின் மும்பையில் வாழ்ந்த நாள்களை ஒரு சகோதரர் இவ்வாறு நினைவு கூறுகிறார் :
காயல்வாசிகள் யார் அங்கு சென்றாலும் தம்மிடத்தில் தங்கவைத்து வேலை வாய்ப்புக்கான வழிகளை காட்டுவார்.
கிழிந்த ரூபாய் நோட்டுக்களை கமிஷன் முறையில் அங்கு ஒரு இடத்தில் மாத்திக் கொடுப்பார்களாம். அவ்வாறு மாத்தச் செல்பவர்களிடம் கொடுப்பது சிறிய கமிஷனாக இருந்தாலும் அதை ரிசர்வ் வங்கியில் மாத்தினால் கமிஷன் பிடிக்காமலே ரூபாயை மாத்திக்கொடுப்பார்கள் என்று சொல்லி பணத்தின் மதிப்பை அன்று நமதூர் மும்பைவாசிகளுக்கு கற்றுக்கொடுத்தவர்.
லாண்டரிக்கு தமது துணிகளை வேறு யாரும் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார், தாமே எடுத்துசெல்வார். தீமையான காரியங்களிலிருந்து விலகி இருந்தவர்.
மார்க்கத்தோடு மிகுந்த தொடர்புடையவராக இருந்தார்.
இதெல்லாம் மர்ஹூம் பற்றி அந்தச் சகோதரர் சொன்னது.
இதுதானே ஒருவர் பிரிந்த பின்பும் நினைவு கூறத்தக்க நற்ச்செயல்கள். இதைத்தானே இறைவனும் ஏற்று ஒருவர் பாவத்தை மன்னித்து சுவனத்தை அவர்களுக்கு பரிகாரமாக்கித் தருகின்றான்.
வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழைகளைப் பொறுத்து மண்ணரை மற்றும் மறுமை வாழ்வில் அனந்தரமாகச் சுவனபதியில் அவர்களை தங்க வைப்பானாக.
அவர்களின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு மேலான பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross