காயல்பட்டணம் பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டணம்....... posted byShameemul Islam SKS (Chennai)[20 July 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 6198
மும்மாவட்ட திருக்குர்ஆன் போட்டியில் வெற்றி பெற்ற இளவல்களுக்கு குவிந்துகொண்டிருக்கும் பாராட்டுக்களைக் காணும்போது நானும் என் பங்கிற்கு ஏதாவது சொல்லவேண்டும் என்பது போல் இருக்கிறது.
ஆண்டின் ஒவ்வொரு தினத்திலும் இதற்காக ஒரு பெரும் முயற்சியே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நமதூரில் உள்ள மத்ரஸாக்கள் கொள்கை வேறுபாடின்றி நமது பிஞ்சுக்களின் மனதில் இவ்விறை அமுதை பதிய வைப்பதிலும், அதை முறைப்படி ஓதிட பயிற்றுவிப்பதிலும் ஒரு மாபெரும் முயற்சியே செய்து வருகின்றனர்.
வெற்றிபெற்ற இம்மாணவர்கள் கவுரவிக்கப்படுவது போல் அவர்களை உருவாக்கப் பாடுபட்ட அவகளின் ஆசிரியர்களையும் கவுரவிப்பது (வெறும் பாராட்டுக்களால் மட்டுமல்ல.................!) தான் சாலச்சிறந்தது.
இம்மாணவர்கள் போல் எண்ணற்ற மாணவர்களை இனியும் பயிற்றுவித்து நம் குடும்பங்களுக்கும், நமதூருக்கும் பல பெருமைகளை ஈட்டித்தருவதும் இவர்கள்தானே.
அடுத்து ஒவ்வொரு ஆண்டும் நமதூரில் வைத்தே இப்போட்டிகளை நாடு தழுவிய அளவில் நடத்தலாமே. என்னிடம் கூட Diasporaவில் உள்ள சகோதரர்கள் ஒரு கோரிக்கையாக இதை முன்வைத்தனர்.
நமதூர் கலாச்சாரம் தழைக்க இதைவிட வேறென்ன வேண்டும்.
எப்போதும் இப்போட்டிகளில் ஹாமிதிய்யா பிள்ளைகள் வெற்றிப் பெயர்களில் வருகிறதெனில் அதற்குக்காரணம் உண்டு. ஆம், அவர்கள் ஏற்படுத்தி தரும் சூழல்கள்தான் அதன் காரணம்.
மத்ரஸாவில் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டு வகுப்புகளுக்கு வரும் முன்னரே கிராஅத்தை போட்டு விடுவார்கள். நிகழ்ச்சிகளின் போதும் அவ்வாரே செய்வார்கள்.
எப்போதோ காலஞ்சென்றுவிட்ட எகிப்து நாட்டின் அஷ்ஷெய்ஃக் அப்துல்பாசித் அப்துஸ்ஸமத் அவர்களின் ஈடு இணை இல்லா கிராஅத் இன்றும் நம் காதுகளில் ஒலிக்கிறதென்றால் அதற்குக் காரணம் இதுதான்.
எனவே தகுந்த சூழலை உருவாக்கித் தருதல் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம்.
அவற்றை உருவாக்காமல் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு பிரச்னைகள் வருகின்றபோது மட்டும் குய்யோ முறையோ எனக் குரலெழுப்புவதில் நியாயம் இல்லை.
கடைசியாக, வாசகர் கருத்துக்களில் பலவற்றில் ஒன்றான காயல்பட்டணம் கலைஞர் பட்டணம் என்றில்லாமல் காயல்பட்டணம் பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டணம் எனப்பெயர் எடுக்கவேண்டும், அதற்கு இது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகள் நடக்கவேண்டும் எனக் கூறி முடிக்கிறேன், வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross