முதலமைச்சர் கலைஞர் ராஜினாமா செய்யவேண்டும் posted bysalih (Bangkok)[21 July 2011] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 6242
சமச்சீர் கல்வி வேண்டுமென்பது பெரும்பான்மையான மக்களின் விருப்பம்,வேண்டுகோள்,நம்பிக்கை இதற்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தமிழ்நாடு அரசுக்கு பேரதிர்ச்சி தரும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு இடைகால தடை வழங்க உச்சநீதி மன்றம் மறுத்ததோடு,ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரவேற்கக்கூடியது மட்டுமின்றி மனநிறைவையும்,மகிழ்வையும் தருகிறது.
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் சென்னை
உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால்,அந்த விழாவுக்கு அவர் செல்லவில்லை.அதை மக்கள் யாரும் குறை
சொல்லவில்லை.உண்மையில் முதல்வர் மிகுந்த சாதுரியமாக நடந்து கொண்டுள்ளார் என்றே பொதுவாக எல்லோரும் கூறினார்கள்.
அந்தச் சாதுரியம் சமச்சீர் கல்வியில் ஏன் இல்லை என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு போன்றதொரு தீர்ப்பு கலைஞர் ஆட்சியில் வந்திருக்குமானால்,
முதலமைச்சர் கலைஞர் ராஜினாமா செய்யவேண்டும் என்று இன்றைய முதல்வர் ஜெயலலிதா நிச்சயமாகக் கூறியிருப்பார். ஆனால் முதிர்ந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர், இதில் வெற்றி
தோல்வி பார்க்காமல் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நாட்டு மக்களின் நன்மைக்காக தமிழக அரசு அமுல்படுத்த வேண்டும் என்று கூறியிருப்பது திராவிடப் பராம்பரிய அரசியலில் நாகரீகத்தின் வெளிப்பாடாகும்.
இனியாவது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதல்வர் ஜெயா அரசு செயல்பட வேண்டும்.
இத்தோடு இன்னொரு செய்தியையும் சொல்லிக்கொள்கிறேன் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் எழுந்தருளியுள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோவில் திருப்பணிக்கு ரூ.18.50 லட்சம் நிதி.
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா உத்தரவு.
சமச்சீர் கல்வி பற்றி மறுப்பு இருந்தால் எழுதுங்கள்.விவாதிப்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross