பாசாங்கு!... posted bykavimagan (dubai)[21 July 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6243
தூங்குபவர்களை எழுப்பி விடலாம்.பாசாங்கு செய்பவர்களை?
எட்டாம் வகுப்பு வரை எல்லோரும் பாஸ் என்ற மத்திய
அரசின் திட்டத்தை ஜெயாவுடைய திட்டமாக புரியாமல்
எழுதியவர்கள்,தானாகவே மேலும் மேலும் தங்களது
அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றார்கள். VAT
என்னும் வரி ஜெயாவினால் கொண்டு வரப்பட்டதல்ல. அது
14 % என்பது பொதுவானதும் அல்ல என்று நான் எழுதியதற்கு ஆதாரமாக அது நான்கு ஆண்டுகளுக்கு முன்பே கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதற்கு,தேடிப்பிடித்து
லின்க்கையும் தந்திருக்கின்றாகள்.அதிகம் படித்தால் அதன்
விளைவு இதுதான்.
மத்திய அரசு ஒரு திட்டத்தை அமுல்படுத்தும்போது
பாதிக்கப்படும் மாநில அரசுகள். கூடுதல் விற்பனை வரியை
விதிக்கலாம் என்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானம் குறித்து பாமர மக்களும் அறிந்த ஒன்றை
.ஜெயலலிதாவினால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்று
கூறுவது அப்பட்டமான கருத்து மோசடியாகும்.
அப்படியானால் வாட் வரியை தளர்த்துவதாக மேற்கு வங்க
அரசும்.மேகலாயா அதைத்தொடர்ந்து தமிழக அரசு அறிவித்து
சிலிண்டர் விலையைக் குறைப்பதாக கூறியது எப்படி?
நமது அறிவு மற்றவர்களுக்கும் நன்மை தரக்கூடிய அளவில்
சரியாக ஆய்வு செய்து எழுத வேண்டும்.நமது நேயர்கள்
அறிவாளிகள்.வார்த்தை ஜாலங்களால் எதையும் சாதிக்கலாம் என்ற காலம் மலையேறிவிட்டது.நான் மீண்டும்
மீண்டும் சொல்வதெல்லாம் ஏனோதானோவென்று எழுதி
மற்றவர்களின் கேலிக்கு ஆளாகவேண்டாம் என்பதை மட்டும்தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross