உண்மை கசக்கிறது! posted bykavimagan (dubai)[23 July 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6309
ஒருநண்பர் பட்டிமன்றத்தில் கேட்பதுபோல இலக்கியத்தில்
மயங்கினாரா? அல்லது குர்ஆன், ஹதீஸ் மூலம் இஸ்லாத்தை
ஏற்றாரா என்று கேட்டிருப்பது வினோதத்திலும் வினோதம்.
குர்ஆன் இறைவனின் வார்த்தைகள். ஹதீஸ் நபிகளாரின்
சொல்லும், செயலும். இவை இரண்டையும் ஆய்வு செய்து,
கட்டுரையாக, கவிதையாக, சட்ட நூற்களாக இன்னும் மொழியின் பல்வேறு வடிவங்களில் வெகுஜன மக்களிடம்
எடுத்துச் சென்று, சிறைபட்டுக்கிடந்த அவர்களது இதயம்
விடுதலைபெற உதவும் திறவுகோல் மொழி மற்றும் மொழி
சார்ந்த இலக்கியங்கள்.
ஒரு விஷயத்தை பேசிக்கொண்டு இருக்கும்போது, இன்னொரு
விஷயத்தைக் கொண்டுவந்து மூலவிஷயத்தை மறக்கடிக்கும்
கேடுகெட்ட யுக்தி கைவிடப்பட வேண்டும். தங்களை குர்ஆன்
ஹதீஸ் வழியில் நடப்பவர்கள் என்று கூறிக்கொள்ளும்
பெரியவர்கள் இருபது ஆண்டுகாலம் கூடிக்குலவி கும்மி
அடித்துவிட்டு, இன்று ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும்
காட்சியை பார்க்கிறோமே? என்ன பிரச்சனை? கொள்கை
மோதலா? தாவா பணியை செய்வதில் கருத்து வேறுபாடா?
இல்லையே! அன்னியப்பென்னுடன் தொடர்பு, பணமோசடி,
சொத்தை கைப்பாற்றி விட்டான், இவன் திருடன், அவன்
திருடன் என்று பத்து பதினைந்து இணையதளங்கள் நாறிக்கொண்டு இருக்கிறதே! போய் அவர்களுக்கு புத்திமதி
சொல்கிற வழியைப் பாருங்கள்.
மூலவிஷயத்திலிருந்து, வேறுவிஷயத்திற்கு திருப்பிவிடுவது
என்பது இதுதான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross