Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ... posted byjamal (colombo)[27 July 2011] IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 6436
புனித மக்கா நகரிலிருந்தும், அல்கோபர் நகரிலிருந்தும் இருவரும், காயல்பட்டணத்திலிருந்து ஒருவரும் இந்த கருத்துப் பரிமாற்றத்தில் உண்மைக்கு மாறானதை எழுதியிருப்பதற்கு மறுப்பாக எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இத்துடன் விவாதம் முடிவடைந்துவிட்டது என்று மாடரேட்டர் எழுதிய பிறகும் இந்த மூவரின் கருத்துக்கள் பதியப்பட்டு இருக்கிறது. ஆதலால் இதையும் தாங்கள் பதிவீர்கள், தங்கள் நடுநிலைமையான தன்மையை நிரூபிப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.
ஹலோ வி.எஸ்.எம். அலி அவர்களே!
நீங்கள் ஆம்புலன்ஸுக்கு சொல்லும்போதே எங்கள் வீட்டின் முன் மேடை இருக்கிறது. ஆம்புலன்ஸ் வர சிரமமாகும் என்று சொல்லியிருப்பின், ஆம்புலன்ஸ்காரரும் மாற்று வழியில் வந்திருப்பார். நீங்கள் அதைச் செய்யவில்லை. மேலும் குத்துக்கல் தெருவிலிருந்து சதுக்கைத் தெரு சுற்றிவர அரை மணி நேரமாகி விட்டது என்று கூறும் கூற்று நகைப்பிற்குரியது. ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
போக்குவரத்திற்கு முற்றிலும் இடையூறு பண்ணி நமது ஊரில் ரோட்டை அடைத்து கல்யாணம், மற்ற விசேஷங்கள் நடத்துகிறார்கள் என்று நமது இணையதளம் செய்தி வெளியிட்டபோது நீங்கள் இந்த மாதிரி கருத்துக்கள் எழுதியிருப்பின் அது உங்களின் சமுதாய மனப்பான்மையை வெளிப்படுத்தி இருக்கும். ஆனால் மீலாது விழா என்று வரும்போது மட்டும் இதை எழுதுவது உங்களின் மார்க்க வெறுப்பையே காட்டுகிறது.
அது சரி தற்போது உங்கள் சொந்தத்தில் நடைபெற்ற திருமணத்தில் ரோட்டில் பந்தல் போட்டு அடைத்தார்களே! அப்போதாவது சொன்னீர்களா? ஏன் உங்கள் சொந்தமாச்சே! சொல்லியிருக்க மாட்டீர்கள்.
அடுத்து சாளை ஜியாவுத்தீன், மற்றும் உயளொ க்கு,
ஆரம்பத்தில் இஸ்லாத்தில் குர்ஆனுக்கு அடுத்தபடியான நம்பிக்கையான கிதாபு என்பது புஹாரி ஷரீபு என்பது அனைத்து தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இன்றுவரை இதை யாரும் மறுக்கவில்லை.
ஆனால் தற்போது, புஹாரி ஷரீபில் வந்திருக்கும் அபுலஹப் நரகத்தில் படும் வேதனையைப் பற்றியுள்ள ஹதீது பற்றி விவாதப் பொருளாக எடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் புஹாரி ஷரீபில் உள்ள அனைத்தும் நம்பகத்தகுந்தவை எனும்போது, இந்த ஹதீதை மட்டும் இந்த இருவரும் மறுக்கிறார்கள், கட்டுக்கதை என்கிறார்கள், எல்லோர்களாலும் ஒருமித்து மறுக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள். யார் மறுத்தார்கள்? ஹதீதுக்கலை நிபுணர்களா? மகான்களா? ஆதாரம் தரவில்லையே!
பலவீனமான, பலமான ஹதீதுகள் என்று பிரிப்பதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது? அல்லாஹ்வா? ரஸூலா? ஏன் இப்படி மாறுபட்டு மக்களை குழப்புகிறீர்கள்?
எதற்கும் ஹதீது, ஆயத்துக்களை ஆதாரம் காட்டச் சொல்லும் இவர்கள் ஆதாரம் காட்டுவதோ பி.ஜே. என்பவர் எழுதிய கற்பனைகளைத்தான். ஏன் இவர்கள் ஹதீது, ஆயத்துக்களை ஆதாரமாக எடுத்துத்தர முன்வரவில்லை? இவர்களிடம் அதற்குரிய ஆதாரங்கள் இல்லை என்பதுதான் அதற்கு அர்த்தம்.
எத்தனையோ குர்ஆன் ஆயத்துக்கள் ஒன்றிற்கு மற்றொன்று முரணாக இருப்பது போலவும், அதேபோல் ஹதீதுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டது போலவும் தோன்றும். ஆனால் அல்லாஹ் சொன்ன, நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிமுறை எவ்வகையிலும் முரண்பட்டது இல்லை என்பதே ஈமானின் உறுதியான நிலை. அப்படியிருக்கும்போது, இவர்கள் இவ்வாறு சொல்வது ஈமான் உறுதியாக இல்லாதவர்கள் சொல்லும் சொல்லாக அல்லவா தெரிகிறது.
கனவுகள் மார்க்கமாகாது என்று சொல்கிறீர்கள்? தற்போது நாம் சொல்லிக் கொண்டிருக்கும் பாங்கு எதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது?
அல்லாஹ் நமது இறுதி நபியை தனது ஹபீபாக தேர்ந்தெடுத்து, இவ்வுலகிற்கு அனுப்புகிறான். அவர்களின் மீலாது (பிறந்த) தின விழாவைக் கொண்டாடும் முகமாகத்தான் அல்லாஹ் அதற்காக ஒரு அடிமையை விடுவித்த அபுலஹப் நரகவாதியாக இருப்பினும் அதற்காக சிறிய சந்தோசத்தைக் கொடுத்திருக்கிறான் என்றால் அவன் தன் ஹபீபின் பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறான் என்பது இதன்மூலம் ஆதாரமாகிறது அல்லவா?
ஒருவன் இஸ்லாத்தை ஏற்பதும், ஏற்காததும் அல்லாஹ்வுடைய திருச்சித்தம். அவனுடைய செயல்பாடுகளில் இதை அவன் ஏன் செய்யவில்லை? இதை அவன் ஏன் செய்தான்? என்று குறுக்கீடு செய்வதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது? ஏன் நீங்கள் அந்த படைத்த நாயனுடன் போட்டிப் போடுகிறீர்களா? நீங்கள் மனம் போன போக்கில் சொல்லுவதெல்லாம் இஸ்லாம் என்று சொன்னால் அதை நம்பி இஸ்லாத்திற்கு வருபர்கள் கதி அதோகதிதான்!
அல்லாஹ் நினைத்திருந்தால்.... என்று அடுக்கிக் கொண்டே போய் இறுதியில் எங்கள் உயிரினும் மேலான நபிகள் நாயகம் செய்த பிரச்சாரத்தை பொய்....(நவூது பில்லாஹி மின்ஹா)... என்ன வார்த்தைகள் இது? இதுதான் நீங்கள் அல்லாஹ், ரஸூல் மீது கொண்ட நம்பிக்கையா?
எதற்கும் உங்களுக்கு ஆதாரம் வேண்டுமெனில் எங்களிடம் கேளுங்கள் நாங்கள் தரத் தயாராக இருக்கிறோம். அதுவும் ஆயத்து, ஹதீதுகளிலிருந்துதான் தருவோம். சிலர் சொன்ன தான்தோன்றித்தனமாக சொல்லிலிருந்து அல்ல.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross