Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார். )[27 July 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6449
அல்லாஹ்வின் நல் அடியார்களே.. இந்த விவாதத்தை கொஞ்சம் விரிவாக அலசினால் தான் நல்லது.. முதலில் இருந்து வரிசையாக வரலாம்..
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது உறவினரை எல்லாம் ஒரு மலை அடிவாரத்தில் கூட்டி தூய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் போது எல்லோரும் மௌனமாகக் கலைந்து செல்ல, அபூலஹபுடைய கரங்கள் மட்டும் மண்ணை வாரி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது இறைத்ததோடு மட்டுமின்றி "இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்? நீ அழிந்து போ!" என்று சொன்னான்.
நூல் : புகாரி 4770, 4801, 4971, 4972,4801, 4971, 4972
இதை கண்டித்துதான் வல்ல ரஹ்மான் அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும் அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை. கொளுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும் விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள். அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது. (அல்குர்ஆன் 111 )
இந்த வசனங்களை இறக்கினான். இதில் வல்ல அல்லாஹ் நெருப்பில் அவனும்(அபூலஹபை) அவனுடைய மனைவியும் கருகுவார்கள் என்று கிளியர் ஆக உள்ளது.
இதுவரை யாருக்கும் முரண்பாடு இல்லை தானே. அடுத்த பல்வேறு வசனங்களை பார்க்கலாம்..
1 . (ஏக இறைவனை) மறுத்து மறுத்த நிலையிலேயே மரணித்தோர் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து (நல்ல) மனிதர்களின் சாபமும் உள்ளது. அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள். அல்குர்ஆன் (2:161,162)
2 .அவர்கள் தாம் மறுமையை விற்று இவ்வுலக வாழ்வை வாங்கியவர்கள். எனவே அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது; உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:86)
3 .அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதன் பின்னர் திருந்தி சீர்திருத்திக் கொண்டோரைத் தவிர (மற்றவர்களுக்கு) வேதனை இலேசாக்கப்படாது. அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் (3:88,89)
இந்த வசனங்கள் எல்லாம் வெறும் சாதாரண காபிர்களை பற்றிய வசனங்களும், எச்சரிக்கைகளும். இதிலும் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது.
சாதாரண இறைமறுப்பாளர்களுக்கே வல்ல ரஹ்மான் நரகத்தில் எந்த சலுகையும் கிடையாது என்று கூறிய பிறகு, மிகக்கொடியவனான, இவனை சபித்து வல்ல இறைவனே ஒரு அத்தியாயத்தையே இறக்கி, இறுதி நாள்வரை அனைவர்களும் இதை ஓதி,ஓதி சபிக்கும் அளவிற்கு மோசமானவனான அபுலஹபுக்கு சலுகை கிடைக்கும், கைவிரலில் தண்ணீர் சுரக்கும் என்று கூறுவது உண்மையான செய்தியாக இருக்குமா?
சரிங்க சகோதரர்களே.. இனி இந்த ஹதீஸை பாருங்கள்..
சுவைபா என்பவர் அபூலஹபின் அடிமையாக இருந்தார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தான். சுவைபா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் பாலூட்டியிருக்கிறார். அபூலஹப் மரணித்த பின் அவனது குடும்பத்தில் ஒருவரின் கனவில் மோசமான நிலையில் அவன் காட்டப்பட்டான். "நீ சந்தித்தது என்ன'' என்று அவர் அவனிடம் கேட்டார். அதற்கு அவன் "சுவைபாவை நான் விடுதலை செய்ததால் இதில் நீர் புகட்டப்படுகிறேன் என்பதைத் தவிர வேறு எதையும் நான் சந்திக்கவில்லை'' என்று கூறினான். நூல் : புகாரி 5101
இந்த ஹதீஸ் புகாரியில் உள்ள ஹதீஸ் தான்.
இதை அறிவிப்பவர் உர்வா என்பவர். இவர் அந்த கால கட்டத்தில் பிறந்தவரா? இல்லை.. நபித்தோழரா, அதுவும் இல்லை. எந்த காலத்திலும் அல்குர்ஆனும், நபி மொழியான ஹதீஸும் முரண்படுமா? கண்டிப்பாக முரண்படாது. நோ சான்ஸ். ஆனால் இங்கு அது மாதிரி தோற்றம் தெரிகிறதே..
வல்ல அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில், திரும்ப திரும்ப "சிந்தியுங்கள்" , "சிந்தியுங்கள்" என்று கூறி, அப்படி சிந்திப்பவர்களுக்கு நேரான வழியுண்டு கூறுகிறானே.. ஆகவே சிந்தித்து பாருங்கள், கண்டிப்பாக அல்குர்ஆனில் பிழை இருக்காது.
எங்கு, எதில் சிறுபிழை உள்ளது என்று தாங்களே சிந்தித்து முடிவு எடுத்துக்கொள்ளுங்கள். யாரையும் குறைத்து மதிப்பிடுவதோ, மனதை புண்படுத்துவதோ என்னுடைய நோக்கம் அல்ல. நானும் நன்றாக இருக்கனும், மற்றவர்களும் என்னை விட நன்றாக இருக்கனும் என்ற ஆவல்தான் அதிகம் உண்டு.
வல்ல ரஹ்மான் அனைவர்களுக்கும் நல்ல, நேரான வழியை காட்டி, நம் அனைவர்களையும் சுவனத்தில் ஒன்று கூட செய்வானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross