Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ... posted byvsm ali (kayalpatnam)[27 July 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 6450
கொழும்பு ஜமால் காக்கா , நீங்கள் , நான் எழுதியவற்றை சரியாக படிக்கவில்லை என்று எண்ணுகிறேன். சரியான இலக்கை அடையமுடியாமல் ஆம்புலன்ஸ் திரும்பி விட்டது என்று சொன்னேன். ஆனால் நீங்களோ , அதை நம்ப முடியவில்லை , இதை நம்ப முடியவில்லை என்று விதண்டாவாதம் பண்ணுகிறீர்கள். சம்பவம் நடந்தது இரவு இரண்டு மணி. மேடை , அன்று இரவில்தான் போட்டு இருக்கிறார்கள் , அது எங்களுக்கு தெரியாது . மேலும் , தெருவை அடைத்து திருமண காரியங்கள் நடத்துவதை பற்றி பலமுறை , பல விவாதங்களில் சொல்லி இருக்கிறேன். தெருவில் பந்தல் போடுவது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் தெருவை அடைத்து , மணிக்கணக்கில், நாட்கணக்கில் போக்குவரத்துக்கு இடையூறு பண்ணுகிறார்களே ! அதுதான் வேண்டாம் என்று சொல்கிறேன். நீங்கள் தொடர்ந்து இந்த kayal .com செய்திகளை படித்து வருபவராக இருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் உங்கள் கருத்துக்களை பார்க்கும்போது , நீங்கள் இந்த இணைய தளத்திற்கு புதியவர்போல தெரிகிறது. மேலும் நான் மார்க்கத்திற்கு புறம்பானவன் என்றெல்லாம் சொல்லி இருக்கிறீர்கள். நம்முடைய மார்க்கமும், பிற மதங்களும் அடுத்தவருக்கு இடையூறு பண்ணுங்கள் என்று ஒருபோதும் சொல்லியது இல்லை. ஆனால் ஊரில் இருக்கும் ஒருசில " adamants and orthodoxies " இப்படி அடுத்தவருக்கு இடையூறு பண்ணிக்கொண்டு , தாங்கள்தான் சிறந்த மார்க்கவாதிகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
தலைவலியும் , காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள் . என் உறவினருக்கு நேர்ந்த அந்த துயர சம்பவம் , உங்களுக்கு நேர்ந்திருந்தால் நீங்கள் இப்படி பேசுவீர்களா ? ஆகையால் உங்கள் எண்ணங்களைத்தான் சற்று மாற்றிக்கொள்ள வேண்டும் . .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross