Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ... posted bykavimagan m.s.abdul kader (dubai)[27 July 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6451
அன்பு சகோதரர்களே! அஸ்ஸலாமுஅலைக்கும்!
பதிவு எண்:39 ல் என்னால் கேட்கப்பட்ட கேள்வி,பதில்
சொல்லப்படாமலேயே இருக்கிறது. அதை மீண்டும் ஒருமுறை
படித்து பார்த்து விட்டு பதில் சொல்வார்கள் என்று மிகவும்
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அபூலஹப் குறித்த திருமறையின் எந்தக்கூற்றையும் நாம்
மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது. அதே நேரத்தில்
நபிமொழியையும் புறந்தள்ளாமல் பொருத்தி பார்ப்பது என்பது நமது சிற்றறிவால் முடியாத ஒன்று.அதனால்தான்
இதைப்பற்றி காலம் காலமாய் ஆய்வு செய்த அறிஞர்களின்
கிதாபுகளும்,அதன் பாகம் முதல் பக்கம் வரை ஆதாரமாக
தரப்பட்டுள்ளது.
சஹாபாக்களையும்,இமாம்களையும் கூட ஏற்கமறுக்கும்
நீங்கள் சொல்லும் விளக்கத்தை நாங்கள் எப்படி ஏற்கமுடியும்?
எதற்கெடுத்தாலும்,பித்அத், பித்அத் என்று முழக்கமிட்டு,
பித்அத் எல்லாம் வழிகேடே! வழிகேடு எல்லாம் நரகத்திற்கே
என்று கூறும் நீங்கள், இரட்டை குத்பா மற்றும் முத்தலாக்
விஷயத்தில்,சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட உமர்(ரழி) அவர்களையும், உதுமான்(ரழி) அவர்களையும் பித்அத்
வாதிகள் ஆக்கிய இவர்கள், அந்த இரு கலீபாக்களால்
அறிவிக்கப்பட்ட,சாட்சியம் பகரப்பட்ட ஹதீசுகளை எல்லாம்
புறம் தள்ளி விடுவார்களா? இப்படியே நீக்கிக் கொண்டே போனால் இது எதில் போய் முடியும்?
இமாம்கள்,சஹாபாக்கள்,நபிமொழிகள் மறுக்கப்பட்டு,
திருமறையின் வசனங்கள் ஒன்றோடொன்று மோதுகிறது
என்று நமது சிற்றறிவுக்கு ஏற்றார்போல் சிந்தித்துக் கொண்டே
போனால் மனிதன் நாத்திகனாக மாறிவிட மாட்டானா?
அல்லாஹ்தான் அந்த நிலைக்கு தள்ளப்படாமல் நம்மைக்
காப்பாற்ற வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross