Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ... posted byCnash (Makkah )[28 July 2011] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6456
இந்த விவாதத்தில் எதிர் கருத்து சொன்ன சகோதரர்கள். சலீம், ஜமால், அன்பு நண்பர் கவிமகன் எல்லோரும் ஏதோ புஹாரி ஹதீஸ் சந்தேக பட்டுவிட்டீர்கள்.. நேற்று வந்த PJ சொன்னது வேதம் போலவும்.. அதை நாங்க பிடித்து கொண்டு அலைவது போலவும் சொன்னீர்கள் அதை விட ஒரு படி மேல போய் சலீம் காக்க எவனோ ஒரு Garry Miller நம்புற நீ புஹாரி யை நம்ம இல்லையா என்று கேட்டீர்கள்..(எவனோ ஒரு Garry Miller கூட அறிவு சார்ந்து இந்த குர்ஆனை ஆராய்ச்சி செய்து இஸ்லாத்தில் தன்னை இணைத்து கொண்டு விட்டார்... நாம் ஏன் இன்னும் மார்க்கம் முன்னோர் என்ற பெயரில் இதயத்தை பூட்டி வைத்து கொண்டு இருக்கிறோம்?)
சரி..Br . ஜியாவுதீன் சுட்டி கட்டிய PJ யின் ஹதீஸ் சம்பந்த பட்ட கருத்துக்கு வானத்திற்கும் பூமிக்கும் குதித்த நீங்க... அதே கருத்தை சொல்லி இருக்கும் எங்களை விட நீங்க அதிகமாக போற்றும் இமாம்கள் அறிஞர்கள் சொல்லும் கருத்திற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?
நம்முடைய மத்ஹாப் பின் இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள் ...
ஒரு ஹதீஸ் சரியானது என்பதற்கான நிபந்தனைகள் நிறைவாகி விட்டால் அதை குர்ஆன் உடன் ஒப்பிடுவது கட்டயமா? கட்டாயம் இல்லை. ஏன் என்றால் அது குர்ஆன் உடன் முரண்படாமல் இருக்கும்போதுதான் நிபந்தனையே பூர்த்தியாகிறது...(இமாம் ஷாபி ..அல்மஹ்சூல் பக்கம் 4 : 438 )
இமாம் இப்னு கய்யூம்...இட்டு கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று அந்த ஹதீஸ் குர்ஆன் உடைய தெளிவான கருத்துக்கு முரண்பட்டு இருக்கும் (அல்மனாருல் முனீப் பக்கம் 80 )
இமாம் குர்துபி....ஒரு ஹதீஸ் அல்லாஹ் உடைய வேதத்திற்கு முரண்பட்டால் அதை செயன் படுத்த கூடாது! (தப்சீர் அல் குர்துபி 12 :213 )
இமாம் ஜுர்ஜானி: ஆதாரபூர்வமான ஹதீஸ் எது வென்றால் அதில் மட்டமான கருத்துக்கள் இருக்காது அது குர்ஆன் வசனத்துடன் மோதாமல் இருக்கும் (அல் தஹ்ரீபாத் 1 : 113 )
அதை போல் இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் புஹாரி இல் வரும் 1854 வது ஹதீஸ் தள்ளாத வயதில் ஹஜ் கடமை பற்றி வரும் அபு ஹுரைரா (ral) அவர்கள் அறிவிக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸ் குர்ஆன் உடைய வசனத்திற்கு முரண் படுவதால் மறுக்கிறார்.... (புஹாரி 1854 )
இது போல இப்னு தைமியாஹ் (ரஹ்) அவர்கள் வானம் பூமி சனிக்கிழமை படைக்க ஆரம்பிக்க பட்டு வெள்ளி கிழமை ஆதம் (அலை) அவர்களை அசரில் படைத்தது முடித்தான் என்று வரும் ஹதீஸ் (முஸ்லிம் 4997 ) 7 நாட்கள் என்று வருவதால் அல்லா குர்அன் நில் சொல்லும் 6 நாள் என்பதற்கு முரணாக இருப்பதால் நிராகரிகிறார்கள் ....
அல்லாஹ்வின் தூதர் சொன்னதாக உமர் (ரலி) அவர்கள் சொல்லி அவர் தோழர் ஷுஹைப் (இல்) அவர்கள் சொன்ன ஹதீஸ் அக முஸ்லிம் இல் இடம் பெற்று இருக்கும் (1694 )... இறந்தவருக்காக அவர்கள் குடும்பத்தினர் அழுவதால் அந்த ஜனாஸா வேதனை செய்ய படும் என்று சொன்ன ஹதீஸ் அப்போதே ஆய்ஷா (ரலி) அவர்களால் நிராகரிக்கப்பட்டு.... சொன்னவரும் பொய் சொல்லுபவர் அல்ல கேட்டவரும் பொய் பேசுபவர் அல்லா மனிதர் என்ற முறையில் விளங்குவதில் தவறு இருக்கும் என்று சொல்லி அது குர்அன் முரண்படுவதாக சொல்லி நிரகரிதாரே அதற்க்கு உங்கள் பதில் என்ன!
அது போல புஹாரியில் இடம் பெற்ற ஆதார பூர்வமான ஹதீஸ் (3849 ) ...கீழ் கண்ட சம்பவம் ஆமிர் பின் மைமூன் அவர்கள் அறிவிக்கிறார் ..
.அறியாமை காலத்தில் விபச்சாரம் புரிந்த பெண் குரங்கு ஒன்றை மற்ற குரங்குகள் எல்லாம் சேர்ந்து கல்லால் அடிப்பதை நான் கண்டேன்... நானும் அவைகளுடன் சேர்ந்து அடித்தேன்.....
இதை அறிவு உள்ள யாரவது ஏற்று கொள்வார்களா... குரங்குக்கு திருமணம் சட்டம் உண்டா., சட்டத்தை நிறைவேற்றும் அறிவை அல்லா கொடுத்து இருக்கிறானா... இது குர்அன் உடனும் அறிவு உடனும் மோதுவதாக தானே அறிஞர்கள் நிரகரிகிரர்கள்... இதை யும் புஹாரியில் இடம் பெற்று இருக்கு என்று ஏற்று கொள்ளவா
மூஸா நபி தன் உயிரை வாங்க வந்த வானவரை கண் பிதுங்கி பார்வை இழக்கும் அளவுக்கு அடித்து திருப்பி அனுப்பினர் என்ற செய்தி புஹாரி இல் 1339 , முஸ்லிம் இல் 4375 போன்ற ஆதாரபூர்வமான ஹதீஸ் களில் இடம் பெற்று இருக்கே... இது அல்லாஹ்வின் வேத வரிகளுடன் மோதுவதாக சொல்லி இமாம் கஜ்ஜாலி போன்ற அறிகர்கள் ஏற்க வில்லையே அவர்கள் எல்லாம் குழப்ப வாதிகளா? இவைகள் எல்லாம் மீளாது மேடை களில் இருட்டடிப்பு செய்ய படும்...
அல்லாவின் தூதர் பல்லியை கொல்லும் படி உத்தரவிட்டார்கள் ஏன் என்றல் அது இப்ராகிம் நபிக்கு நெருப்பு குண்டத்தை ஊதி பரவசெய்தது என்று புஹாரி (3319 ) இப்னு மாஜா (3222 ) முஸ்னத் அஹ்மத் (23339 ) போன்ற ஹதீஸ் அறிவிற்கும் குர்அன்கும் மற்ற ஒரு ஹதீஸ் (புஹாரி 1831) மாற்றமாக வந்த கருத்து என்று சொல்லி மேல் சொன்ன அறிஞ்சர்கள் நிராகரிகிரார்களே..அவர்கள் குழப்ப வாதிகளா ..இல்லை சலீம் காக்கா நீங்க இதை அளவு கோலாக கொண்டு பல்லியை தேடி தேடி அடிக்க போறீர்களா!!
இது போன்று இன்னும் பல உள்ளது இதை சுட்டி காட்ட நேரம் இல்லை... இவை எல்லாம் நேற்று வந்த PJ சொன்னது இல்லை... நீங்கள் பின்பற்றும் இமாம்களும், அறிஞர்களும் சொன்னதுதானே இதையாவது மனம் திறந்து ஏற்று கொள்வீர்கள... இல்லை இமாம்களுடன் மோதுவீர்களா?
அதே வரிசையில்தான் எங்கே விவாதிக்கபடும் அபுலஹப் பற்றிய ஹதீஸ் உம் நிராகரிக்க படுகிறது அபுலஹாப் உடன் அபுதலிப் ஒப்பிட பட கூடியவர் இல்லை.. அவன் அல்லாவால் சபிக்க பட்டவன்..
, ”அல்லாஹ்வின் மீதாணை யாக! எனக்குத் தடை விதிக்கப்படும்வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டேயிருப்பேன்” என்று சொன்னார்கள். அப்போதுதான், ”இணைவைப்போருக் காகப் பாவமன்னிப்புக் கோர இறைத் தூதருக்கும், இறைநம்பிக்கையாளர் களுக்கும் உரிமை இல்லை” எனும் (9:113 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருüனான். அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்தியபோது) அல்லாஹ் ”(நபியே!) நீங்கள் விரும்பியவரை(யெல்லாம்) நேர் வழியில் செலுத்திவிடமுடியாது. மாறாக, அல்லாஹ்தான் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான்” எனும் (28:56ஆவது) வசனத்தை அருüனான்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
புகாரி( 4772)
இன்னும் ஒரு நண்பர் ...கனவு பற்றி சொல்லும் பொது சொன்னார்...பாங்கு .அது கனவில் தானே வந்தது என்று ...பாங்கு பற்றி வரும் ஹதீஸ் கொஞ்சம் ஒழுங்கா பார்து விட்டு வந்து சொல்லுங்கள்.. தொழுகைக்காக அழைப்பு பற்றிய ஆலோசனை வரும் பொது சில தோழர்கள் மணி அடிக்கலாம் என்றும், கொடி ஏற்றலாம் என்றும், சொல்லும் பொது உமர் ரலி அவர்கள் பங்கு அழைப்பு சொன்னதாக (அபூதாவூத் 2:507 ) லும், அப்துல்லாஹ் பின் ஜைது அவர்கள் கனவில் கண்டதாக பங்கின் வரிகளை சொல்லும் போது அல்லாஹ்வின் தூதர் அங்கீகாரம் செய்ததாகவும் (2 : 498 ) வருகிறது... அதற்க்கும் அபு லஹாப் சம்பவத்தில் வரும் கனவு யாரோ ஒருவர் கண்டதாக உர்வா என்றவர் சொல்லுவதற்கும், அது பற்றிய சம்பவமே அல்லாவின் தூதர்க்கு எடுத்து சொல்லபடவோ அங்கீகாரமோ இல்லை என்று சொல்லுவதற்கும் என்ன இருக்கு?
சிந்திக்க வேண்டும் என்ற ஆசையுடன் கருத்துக்களை பாருங்கள் ...அல்லா நம் யாவருக்கும் நேர் வழி காட்டுவான்
வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross