செய்தி: நகராட்சித் தேர்தலை கருத்திற்கொண்டு, ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவக்கம்! உலக காயலர்களுக்கு ஓர் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகராட்சித் தேர்தலை கருத்த... posted bySalai Sheikh Saleem (Dubai)[22 August 2011] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7092
அன்புள்ளம் கொண்ட சகோதரர்களே!
அஸ்ஸலாமுஅலைக்கும்!
நல்லதோர் நகர்மன்றம் அமைக்கின்ற மகத்தான பணியை
ஒருங்கிணைப்பதற்காகத் துவக்கப்பட்ட MEGA வில் இணைந்து
பணியாற்ற இசைந்து மின்னஞ்சல் மூலம் தங்களது பெயரை
பதிவுசெய்துள்ள நண்பர்களுக்கும்,நமது காயல்பட்டணம்.காம்
வலைதளத்தின் மூலமாகவும், அலை மற்றும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு தார்மீக ஆதரவு தெரிவித்துவரும் அன்பு நெஞ்சங்களுக்கும்,ஆக்கபூர்வமான ஆலோசனைகள் பலவற்றை வழங்கிவரும் சொந்தங்களுக்கும் MEGA தனது இதயப்பூர்வமான
நன்றியை உரித்தாக்குகிறது.
மதிப்பிற்குரிய சகோதரர் VD .சதக்கு தம்பி அவர்களே!
MEGA என்பது,எதிர்வரும் நகராட்சித் தேர்தலில், நகர மக்களுக்கு வழிகாட்டும் ஒரு தற்காலிக அமைப்பு மாத்திரமே! இந்த அமைப்பு ஐக்கியப்பேரவை உட்பட வேறு எந்த அமைப்பானாலும், நல்லதை செய்யும்போது நிச்சயம் ஆதரிக்கும். சமூக,கொள்கை, அரசியல் சார்பற்ற இந்த அமைப்பின் ஒரேநோக்கம், சிறப்பானதொரு நகர்
மன்றம் அமைத்திட மக்களுக்கு வழிகாட்டுவது மாத்திரம்தான்.
இந்த அமைப்பு நகரின் அனைத்து சமூக இயக்கங்கள், ஜமாத்கள் மற்றும் நல்லதைநாடும் தனிநபர்களின் நேர்மையான ஆலோசனை எதுவாக இருந்தா லும் ஏற்றுக்கொள்ளும். இந்தப்பணியை ஐக்கியப் பேரவை சுயநலம் மற்றும் பாகுபாடின்றி செய்யுமானால் அவர்களது செயல்பாடுகளை ஆதரிக்க MEGAவிற்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.
எந்தவித சுயநலமும் இல்லாமல், அல்லாஹ்வை முன்னிறுத்தி ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, வேறு எந்த அமைப்பிற்கும் எதிரானது அல்ல என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றோம். ஆகவே, எங்களது இந்த தன்னலமற்ற பணிக்கு, மண்ணின் மைந்தர்கள் அனைவரும் ஆதரவுதர வேண்டும் என்று MEGA மீண்டும் மீண்டும் அன்புடன் வேண்டுகிறது.
நல்லதோர் நகர்மன்றம் நாடும்
சாளை சலீம், பஜுல் கரீம்,
ஒருங்கிணைப்பாளர்கள். MEGA
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross