பணக்காரர்களை அழைத்து கெளரவம் செய்யுங்கள் ! பள்ளி வாசலுக்கு நிதியை பெருக்குங்கள்!! கொடுங்கள் ! posted byK.V.A.T.HABIB MOHAMED (QATAR)[23 August 2011] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 7159
பார்ப்பதற்கு ஒரு அழகான நிகழ்வு இது! நகரின் முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கெளரவிக்கப்படுகிறார்கள்... மாஷா அல்லாஹ்! தம்பி மஹ்மூத் நெய்னா மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் சிறந்த செயல் இது... ஏன் தெரியுமா? அங்கே சென்று ஒரு சுற்று சுற்றி பார்த்துவிட்டு வந்து சொல்லுங்கள்... எப்படி கிடந்த பள்ளி வாசல்... தர்ஹா கட்டிடங்கள்... பெண்கள் பகுதி இருப்பிடங்கள்... கழிவு உபாதை தளங்கள்..... இன்றைக்கு எப்படி அழகுற கட்டி நிறைவு செய்யப்பட்டு கம்பீரமாக காட்சி தருவதோடு மட்டும் அல்லாமல் மக்களுக்கும் எவ்வளவு மன நிறைவை தந்து கொண்டு இருக்கிறது...
இன்னும் தேவைகள் நிறையவே இருக்கிறதே...... அதை யாரையாவது பிடித்து அவர்களின் பொருள் உதவியால் பூர்த்தி செய்யணுமே என்ற ஆதங்கத்திலும் உள்நோக்கில் அல்லது ராஜ தந்திரமாக கூட இருக்கலாமே.... இதுல என்ன உள் அர்த்தம் கற்பிக்கிறது என்றுதான் புரியவில்லை....
ஒரு காலத்தில் சுல்தான் ஹாஜியார் (மர்ஹூம்) அவர்களால் மஸ்ஜிதே நூர் கட்டி கொடுக்கப்பட்டு இன்று அது சிதைந்து விழும் நிலையில் இருந்த ஒரு நிலையை அப்படியே மாற்றி அமைத்து புத்தம் புதிய பள்ளியாக உருவாக்கிய நிர்வாகிகளை மனம் திறந்து வாழ்த்தி துஆ செய்து பாராட்ட முன் வாருங்கள்!
அன்றைக்கு வருகை புரிந்த பணக்காரர்கள் மீதம் உள்ள மராமத்து பணிகளுக்கு நிச்சயமாக அனுசரணை புரிவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை... அந்த இடத்தை பார்வை இட இந்த இப்தார் நிகழ்ச்சி ஒரு கருவியாக இருக்கட்டுமே..... இதில் உள் அர்த்தம் கற்பிக்க ஒன்றுமே இல்லை நண்பர்களே... ஏழைகளும் இருக்கத்தானே செய்கிறார்கள் அங்கே! வந்தவர்கள் அனைவரும் தனவந்தர்களும் அல்லர்....
என் குடும்பத்தை சார்ந்தவர்களை அழைக்கவில்லையே என்று நான் கோவப்பட்டு இந்த தர்காவுக்கு காசு தரமாட்டேன் என்று சும்மா இருந்தால்..!? நம்மை யாரும் அழைத்து மரியாதை செய்ய வேண்டும் என்று நாம் ஒரு போதும் கருதக்கூடாது.. நாமே இது போன்ற நிகழ்ச்சிகளில் மனம் உவந்து கலந்து கொண்டு நிர்வாகம் செய்பவர்களை வாழ்த்தி துஆ செய்ய வேண்டுமே தவிர குறை கூறி அதை இது போன்ற ஆயிரம் கணக்கான வாசகர் அறியும் வண்ணம் செய்வதும் மிக மிக தவறே...
நாம் என்றுமே விசாலமான தன்மை கொண்டவர்களாக திகழ்வோம். யாருக்கு தெரியும் இப்படி ஒரு நிகழ்வு என்று சொல்லவும் கூடாது... இதை ஒரு கந்தூரி மாத்ரி நடத்தினால் என்ன செலவு ஆகும் என்று நம் அனைவருக்கும் தெரியும் தானே? அதனால் குறிப்பிட்ட நபர்களை அழைத்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம்.... இதில் தவறு ஒன்றும் இல்லை சகோதரர்களே... நல்ல நோக்கில் நடந்த சம்பவம் தானே என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். அது தான் பண்பு நண்பர்களே...
இந்த பகுதி கலந்தாய்வு செய்யும் டிஸ்கசன் பகுதி அல்ல தோழர்களே... இந்த செய்தியை பற்றிய உங்கள் கருத்தை பதிவு செய்ய மட்டுமே.... நாம் அனைவரும் இதை தவறாக புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறோம் என்றே கருதுகிறேன்..... தயவு செய்து ஒன்றை மட்டும் மிக தெளிவாக உணரனும்..... இந்த வலை தளம் நடத்தும் அன்பர்கள் தங்கள் சொந்த செலவிலேயே நம் ஊர் நலன் கருதி செய்கிறார்கள். நகரின் ஒற்றுமையும்... ஊரின் தனித்தன்மையும் பேணி பாதுகாக்கப்படனும் என்ற நல்ல நோக்கில்தான் இதை செய்கிறார்கள். எந்த வகையில் எல்லாம் இந்த வலை தளத்துக்கு நாம் ஆதரவு கொடுக்க வேணுமோ அந்த அளவுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.
அன்புக்குரிய அட்மின் அவர்களே...இனி வரும் காலத்திலாவது இது மாதரியான கருத்துக்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம் என்றும், அப்படியே இது மாதிரியான DISCUSSIONS களை DISCUSSION BOARD இல் நடத்திக்கொள்ள அறிக்கை வெளி இடுமாறு உங்களுக்கு அன்பு வேண்டு கோளையும் இதன் மூலம் விடுக்கிறேன்.
நம் ஒற்றுமை என்றும் தலைத்தோங்குவதற்க்கு இந்த வலை தளம் மென்மேலும் பாடு பட.... இதை இனிதே செயல் படுத்தும் நல்ல நெஞ்சங்களுக்கும் இந்த தருணத்தில் நாம் அனைவரும் துஆ செய்ய கடமைப்பட்டிருக்கிறோம் ..ஆமீன்!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross