உண்மை கசக்க செய்யும் அதில் நன்மை உள்ளது நண்பரே posted byசட்னி .செய்யது மீரான் (காயல்பட்டினம்)[23 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7160
அஸ்ஸலாமு அலைக்கும்.
காட்டு மொகுதூம் பள்ளி நிர்வாகம் சார்பாக மறுப்பு செய்தி அளித்துள்ள என் அன்பினும் இனிய தம்பி எம்.ஏ.கே.ஜெயினுல் ஆப்தீன் அவர்களே
நீங்கள் அல்லாஹ்வை சாட்சியாக வைத்து
உங்கள் மனதில் கை வைத்து சொல்லுங்கள்
காயலில் உள்ள நமது சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை பின்பற்ற கூடிய அனைத்து பள்ளிகளுக்கும் அழைப்பு கொடுத்து இது போன்ற நிகழ்வு உள்ளது என்று அறிவிப்பு செய்திர்களா இல்லை.
கடந்த வார ஜும்மாஹ்வில் பொதுமக்களுக்கு
அறிவிப்பு செய்து அழைப்பு விடுத்தீர்களா..
இல்லை என்றாள் இந்த புனித நிகழ்வில்
இவ்வளவு மக்கள்கள் வந்துள்ளர்களே
இவர்களுக்கு எப்படி, யார் மூலம் தெரிந்து
வந்தார்கள் என்று சொல்லமுடியுமா.
இதே வலைதளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்
நீங்கள் தலைவராக உள்ள காக்கும் கரங்கள் அமைப்பின்
சார்பாக நடைபெற்ற நோன்பு துறப்பு செய்தியும்,
பட காட்சியும் பார்த்தோம் பரவசம் அடைந்தோம்.
அது உங்கள் தனி பட்ட அமைப்பின் நிகழ்வு
அதனை விமர்சனம் செய்யும் உரிமை
யாருக்கும் இல்லை. அனால் இதுவோ
ஒட்டுமொத்த காயலில் உள்ள நமது சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை பின்பற்ற கூடிய அனைத்து
நபர்களுக்கும் உரியது என்பதை நீங்கள் மறுக்கவோ, மறைக்கவோ மாட்டிர்கள்.
இந்த பள்ளி கடந்த காலங்களில் அந்நியர் அல்ல
நம் அருகில் உள்ள உடன்குடி நபரின் கையில்
அகப்பட்டு பல காலங்கள் நீதி மன்றங்களில்
அலைகழிக்க பட்டு எங்கள் குத்பா பெரிய பள்ளி
முஹல்லாக்கு உட்பட்ட பள்ளிகளின் நிர்வாகத்தினரின்
இடை விடாத பெருமுயற்சியாலும், எல்லாவற்றையும்
விட மேலாக வல்லோனாம் அல்லாஹ்வின் பெரும் கிருபையாலும் இன்று நமது கைக்கு வந்தள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இங்கு முதலில் கந்தூரி நடத்துவதற்கு வருடத்திற்கு
ஒரு பள்ளி என எங்கள் குத்பா பெரிய பள்ளி
முஹல்லாக்கு உட்பட்ட பள்ளிகளின் நிர்வாகத்தினர்
பொறுப்பு எடுத்து செய்து வந்துள்ளோம்.
எங்கள் மொஹிய்தீன் பள்ளி சார்பாக பொறுப்பு எடுத்து நடத்தும் கந்தூரி நிகழ்விலும் நானும் பல, பல ஆண்டுகள் உறுப்பினராக இருந்து நல்ல முறையில் பங்காற்றி உள்ளதோடு உடன்குடி நபரின் கையில் அகப்பட்டு பல காலங்கள் அலைகழிக்கபட்ட சமயம் உரிமைக்காக உரக்க குரல் கொடுத்தவனில் நானும் ஒருவன் என்பதை மார்த்தட்டி சொல்கின்றேன்.. அல்லாஹ் போதுமானவன்.
இந்த இனிய நிகழ்விற்கு கடந்த 2009ஆம் வருடம்
நடைபெற்றபோது என் மரியாதைக்குரிய
ராவன்னா அபுல் ஹசன் ஹாஜியார் போவோம்
என அழைக்க அவர்களுடன் வந்து கலந்துள்ளேன்.
அங்கு நடைபெற்ற நிகழ்வும், அதில் கலந்து கொண்ட
நபர்களின் முகங்களும் என் மனதில் பசு மரத்து ஆணி போல் பதிவாகி உள்ளது.
அன்று பார்த்த அதே நபர்களை இந்த நிகழ்விலும்
பார்க்கவும் (மேலும் இந்த வலை தளத்தில்
கடந்த நான்கு ஆண்டுகளாக பதிவான செய்திகளை, போடோகளை திரும்பவூம் பாருங்கள் உங்களுக்கு தெளிவாகும், தெரிய வரும்)
இந்த வலை தளத்தில் இன்றும், அன்றும் நடைபெற்று வரும் ஊரில் உள்ள அனைத்து பள்ளிகளின்
நோன்பு துறப்பு நிகழ்வுகளின் செய்திகளில், போடோகளில்
இந்த ஹாஜியார், இந்த நபர்கள் கலந்துகொண்டார்கள்
என்ற வாசகம் இல்லாத பொழுது இதில் மட்டும்
இவர்கள் எல்லாம் கலந்து கொண்டார்கள்
என்று வந்துள்ளதும் அறிவீர்கள்.
இதில் கருத்து பதிவு செய்துள்ளவர்கள் என் அன்பிற்குரிய மருத்துவர்.நூருதீன் அவர்கள் உட்பட எல்லோரும் தற்சமயம் காயலில் இல்லை. இதனால் அவர்களுக்கு இதன் உண்மை தெரிய வாய்ப்பில்லை. ஆர்வ மிகுதியால் சம்பந்தம் இல்லாது நண்பரின் பெயரையும் அவராகவே மனதில் நினைத்து
எழுதிவிட்டார். இதற்கு தான் சொல்வார்களோ
அப்பன் குதிரில் இல்லை என்ற பழமொழி.
வாழ்க அன்பு மாடரடேர்களுக்கு கத்திரி போட வைத்து, அவர்கள் சிவப்பு எழுத்து எழுத வைக்காத கருத்துகளை
நாம் பதிவு செய்தால் அதுவே மிக சிறந்தது.
முயற்சி செய்வோமாக அல்லாஹ் உதவிடுவான்,
இந்த கருத்து பதிவிற்கு நான் உங்களோடு விவாதம்,
கருத்து யுத்தம் நடத்துவதர்ககவோ இல்லை.
இது போன்ற தவறுகள் இனி வரும் காலங்களில்
நிகழாத வண்ணம் கவனம் செலுத்தவே. இன்ஷாஅல்லாஹ்.
நம்மை பிறர் குறை குறைவோ, குற்றம் சாட்டவோ
நாம் இடமளிக்க வேண்டியதில்லை.
உண்மை கசக்க செய்யும் அதில் நன்மை உள்ளது நண்பரே;
இதற்க்கு வைப்போம் முற்று. அவசியம் இருப்பின் நேரில் கருத்துகளை பரிமாறுவோம். இறைவன் நாடினால்.
அல்லாஹ்விற்காக நாம் செய்யும் அனைத்து
நல்ல காரியங்களையும் ஒப்பு கொண்டு நற்கூலி
தனை இரு உலகிலும் தருவானாக ஆமீன்.
அன்புடன்
சட்னி .செய்யது மீரான்
ஸ்டார் ஹவுஸ், மொஹ்தூம் தெரு
காயல்பட்டினம்
அலை பேசி 850 8570 955
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross