வாழ்த்தி துஆ செய்யும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனம் உவந்த நன்றிகள் ! posted byK.V.A.T.HABIB MOHAMED (QATAR)[23 August 2011] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 7161
ரகசியமாக செய்துக்கொண்டிருந்த சில செயல்பாடுகளை பெரியவர்களின் ஆலோசனை பிரகாரம் வெளி உலகத்துக்கு தெரியச்செய்து அதை பார்க்கக்கூடியவர்களும், நம்மை போன்ற நடுத்தர வர்க்கதினர்களும் எங்களைப் பின்பற்றி இது போன்ற செயல்களை செய்வார்களேயானால்... இன்னும் நிறைய பேர் பலன் அடைய முடியும் என்ற நல்ல நோக்கில் மட்டும் அல்லாது.... அதன் தவாபை போன்றே ஒரு தவாபும் யார் பெயரால் நாங்கள் செய்கிறோமோ அந்த மர்ஹூம்களுக்கும் கிடைக்கும் என்ற நல்ல எண்ணத்திலும்தான் என்பதை இந்த தருணத்தில் மிகவும் அடக்கத்தோடும், பணிவோடும் தெளிவு படுத்த விரும்புகிறோம்.
நாயகம் நபிகளார் (ஸல் லல்லாஹு அலை ஹி-வ ஸல்லம் ) அவர்கள் வழியில் முடிந்த மட்டும் அல்லாஹ்வின் திருப்பொருத்த துக்காக மட்டுமே இது போன்ற செயல் பாட்டை வெளிச்சத்துக்கு காட்டி வருகிறோம் அல்லாது பிறர் புகல..பாராட்ட வேண்டும் என்பதற்க்கல்ல....(தற்பெருமை ..தற்புகழ்ச்சியை விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாகவும்...ஆமீன்.!
இது போன்ற த உவா (dhawaa ) பணியை நாம், ஐக்கிய சமாதான அறக்கட்டளை (ஹாமீத் பக்ரி ஆலிம்) போன்றவர்கள் மூலமாகவும் செயல்படுத்தினால் இன்னும் சிறப்பாக சென்றடையும்.
தாம்பரம் (சென்னை) பக்கத்திலுள்ள மலை அடிவாரத்தில் ஒதுக்குப்புறத்தில் மிகவும் பின் தங்கிய பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் வாழும் குக் கிராமத்துக்கு எங்கள் நேசக்கரம் நீட்டு கிறோம் (இன்ஷா அல்லாஹ்) என்ற நல்ல செய்தியையும் இங்கே பதிவு செய்வதோடு ... இன்ஷா அல்லாஹ் ...அடிப்படை வசதி அற்ற, படிப்பதற்கு இயலாத நிலை மாறிட.....அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கு... மின்சாரம் ...தெரு வசதி ...போன்றவற்றை செயல் படுத்துவதன் மூலம் நம் இஸ்லாமிய வழி நெறி முறை உணரப்பட அல்லாஹ் தவ்பீக் செய்வானாகவும் .....து ஆ செய்யுங்கள் ! வாழ்த்துங்கள்!! எங்களை வழி நடத்துங்கள் !!! என்று உரிமையோடு உங்கள் அனைவரையும் இந்த தருணத்தில் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் .
(உங்கள் மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் எங்கள் மின் அஞ்சல் மூலம் அறிய தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்) நன்றி !
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே !!! அல்ஹம்து லில்லாஹ் ............
அன்புடன் ,
K.V.A.T.ஹபீப்
K.V.A.T. அறக்கட்டளை
காயல்பட்டணம் & கத்தார்.
kvat.habib@gmail.com
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross