செய்தி: நகராட்சித் தேர்தலை கருத்திற்கொண்டு, ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவக்கம்! உலக காயலர்களுக்கு ஓர் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அன்பான வாசகர்களே! posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[24 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7184
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அன்பான வாசகர்களே!
‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ ‘MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION (MEGA)‘ என்ற இந்த செய்தியை வாசிப்பவர்கள் தயவு செய்து தெளிவாக வாசித்து அதற்கு கருத்துக்களை பதிந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமையுண்டு - அந்த கருத்துக்கள் இந்த அமைப்புக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கலாம் அதிலே எந்த தவறுமில்லை.
ஆனால் சொல்லப்படும் கருத்துக்கள் இந்த செய்தியை அடிப்படையாக வைத்தே இருக்க வேண்டும், யாரையும் புண் படுத்தாமல் , மரியாதை குறைவான வார்த்தையை உபயோகிக்காமல் இருப்பதுடன் - செய்திக்கு சாதகமோ , பாதகமோ - எதுவானாலும் பிரயோசனமான கருத்தாக இருக்கவேண்டும்.
அதல்லாது எல்லோரும் எழுதுகிறார்கள் நாமும் எழுதுவோம் என்று செய்தியின் முக்கியத்துவத்தை புறம் தள்ளி - கேளியும் ,கிண்டலுமாக அர்த்தமற்ற கேள்விகளுடனும் , தேவையற்ற விளக்கங்களுடனும் எழுதுவது ஆரோக்கியமாகாது.
யார் , யாரெல்லாம் எப்படியெல்லாம் கருத்துக்கள் எழுதியிருக்கிறோம் என்பதை , எழுதியிருக்கும் நாம் அனைவரும் மீண்டும் ஓரிரு முறை படித்து பார்த்தால் விளங்கும் நாம் எழுதியிருப்பது தவறா? இல்லை சரியா ? என்பது.
என்னுடையப் பார்வையில் மட்டுமல்ல நடுநிலையாக சிந்திக்கும் எவருக்கும் இந்த அமைப்பு இன்றைய கால சூழலுக்கு உகந்ததாகவே தெரிகிறது அதிலே எந்தவித சந்தேகமுமில்லை.
" மெகா " என்ற இந்த அமைப்பு தேர்தலுக்காக உருவாக்கப்பட்டிருக்கிற தற்காலிக வழிகாட்டு அமைப்புதானே தவிர - ஐக்கிய பேரவை , காயல் நல மன்றங்கள் , சங்கங்கள் மற்றும் பொதுத்தொண்டு நிறுவனங்கள் போன்று நிரந்தரமாக இருந்து செயல்படும் நிறுவனம் அல்ல.
இதை நமது மெகா சகோதரர்களே தெளிவாக தெரிவித்திருக்கிறார்கள் - நமது ஊரில் பல பொது தொண்டு நிறுவனங்கள் வெகு நாட்களாக இருந்து நல்ல பல சேவைகளை செய்து வந்தாலும் - தேர்தல் நேரத்தில் மெச்சும்படியான எந்த ஒரு நல்ல முடிவுகளையும் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி செயல்படவில்லை என்பது மறுக்க முடியாத , மறைக்க முடியாத உண்மை.
இதை நாம் எல்லோரும் உணர்ந்து இருக்கிறோம் - நம்மிலே சிலருக்கு ........... இல்லை........ இல்லை .......... பலருக்கு - ஏதாவது ஒரு நல்ல அமைப்பு உருவாகி இந்த நகர்மன்றத்தை சீர்படுத்த வேண்டும் என்ற ஆதங்கம் இருக்கிறது. ஆனால் அதை யார் செய்வது ? எப்படி செய்வது ? பூனைக்கு மணி கட்டுவது யார் ? என்ற முனங்களுடன் இதுவரை இருந்து வந்தோம்.
ஆனால் நமது சகோதரர்கள் அதை வெறும் முனங்களுடன் ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை, செயலில் காட்ட வேண்டியதுதான் நம் உடலும், உயிரும் கடல் கடந்திருந்தாலும் நினைவெல்லாம் ஊரில்தானே! நாம் திரும்ப செல்வதும் நம் சொந்த ஊருக்குத்தானே!! என்றவர்களாக
நகர் நலனை கருத்தில் கொண்டு அல்லாஹ்வை முன்னிறுத்தி ஓர் அமைப்பைத் தொடங்குவோம் உலகெங்கும் வாழும் நமது ஊர் மக்களும், ஊரில் உள்ள மக்களும் ஓன்று சேர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம், அதன் மூலம் வருகின்ற நகர்மன்றத் தேர்தலில் நல்லவர்களை தேர்ந்தெடுத்து நல்லாட்சி அமைக்கலாம் என்ற நல்ல எண்ணத்திலே இந்த தற்காலிக அமைப்பைத் தொடங்கி இருக்கிறார்கள்.
இதிலே அவர்களுக்கு எந்த உள்நோக்கமுமில்லை - அவர்கள் யாரும் போட்டியிடப்போவதுமில்லை - மேலும் அவர்கள் இன்ன, இன்ன ஆளை தேர்தலில் நிறுத்துகிறோம் என்று சொல்லவுமில்லை.
மாறாக உங்கள் பகுதியிலே, உங்கள் ஜமாஅத்திலே நல்லவர்களை தேர்ந்தெடுத்து நகர்மன்றத்திற்கு அனுப்புங்கள் என்றுதான் சொல்கிறார்கள்.
அவர்கள் நமக்கு தருவது வெறும் வழிக்காட்டல் மட்டுமே! இதிலே நமக்கு , நம் மக்களுக்கு விழிப்புணர்வுதான் ஏற்படுகிறது.
மேலும் அவர்கள் கூறுகிறார்கள் :
"கடந்த காலங்களில் நாம் எத்தனையோமுறை நகர்நலன் கருதி நமது காயல்பட்டணம்.காம்இல் செய்த விவாதங்கள், காயல் மாநகரில் வாழும் வாக்காளர்களை சென்றடையும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஆதலால் உண்மை நிலையை ஊருக்கு எடுத்துச் சொல்லவும், அந்ந்தந்த பகுதிகளில் இருக்கும் ஜமாஅத் மற்றும் சமூக அமைப்புகளுடன் தொடர்புகொள்ளவும், நல்லவற்றை பல்வேறு தகவல் மற்றும் ஒளிபரப்பு ஊடகங்கள் மூலம் நகர மக்களுக்கு எடுத்துச் செல்லவும், நல்லவர்களை அடையாளம் காட்டவும் இப்படி ஓர் அமைப்பு செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கருதுகிறோம்." என்று, இதன் மூலம் தெளிவாகிறது மெகா சகோதரர்கள் கடல் கடந்திருந்துக் கொண்டு இன்டர்நெட் மூலமாக இந்த அமைப்பை நடத்த வில்லை என்பது புலனாகிறது.
அதனால் நாம் அனைவரும் இது போன்ற சுயநலமில்லாத அமைப்புக்கு ஒத்துழைப்பு கொடுப்பதே சிறந்தது அதல்லாது தேவையற்ற வாக்குவாதங்களை செய்வதில் பயனில்லை.
-------------------------------------------------
மக்களே !
இந்த முறை நடைபெறப் போகிற தேர்தலில் பழைய உறுப்பினர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு - நல்லவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பினால் இன்ஷா அல்லாஹ்! நமது நகர்மன்றம் மிகச்சிறப்பாக இயங்கும்.
இன்ஷா அல்லாஹ்! உறுப்பினர்கள் நல்லவர்களாக அமைந்துவிட்டால் - நிச்சயமாக லஞ்சம் வாங்கக்கூடிய அதிகாரியும், அலுவலர்களும் இடத்தை காலி பண்ணி விடுவார்கள்.
மக்களே! நமக்குள்ளே எத்தனை கோஷ்டி , பூசல்கள் இருந்தாலும் அவைகளை மறந்துவிட்டு ஒற்றுமையாக செயல்படுங்கள். வீணாக தேவையற்ற முறையில் பலபேர் போட்டிப்போட்டு ஓட்டுக்களை சிதறடித்து பிரிந்துவிடாதீர்கள்.
மந்தையை விட்டு பிரிந்த ஆடுதான் ஒநாயிக்கு இரையாகும் எனவே - நாமும் மந்தையைவிட்டு பிரிந்து போன ஆடுகளாய் பிரிந்து போய் அன்னியருக்கு இடம் கொடுக்காமல் - ஓன்று பட்டு ஒற்றுமையாக இருந்து செயல்படுவோமாக.
அவசியமான , தேவையான கருத்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொண்டு இந்த அமைப்புக்கும் நாம் ஊக்கம் கொடுத்து ,முடிந்தவரை நாமளும் மக்களை விழிப்புணர்வு பெறச்செய்து வருகின்ற தேர்தலில் நன் மக்களை தேர்ந்தெடுத்து அனுப்பி நம் நகர் மன்றத்தை ஒரு சிறந்த நகர்மன்றமாக இயங்க செய்வோமாக.
எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் அனைவரையும் ஒரு குடையின் கீழிருந்து ஒற்றுமையாக வாழ கிருபை செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross