செய்தி: நகராட்சித் தேர்தலை கருத்திற்கொண்டு, ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவக்கம்! உலக காயலர்களுக்கு ஓர் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பகைதனை போக்கி, பலம்தனை பெருக்கி posted byசட்னி .செய்யது மீரான் (காயல்பட்டினம்)[24 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7196
அஸ்ஸலாமு அலைக்கும்.
நாம் ஒன்றும் நகர் மன்ற உறுப்பினர்களையோ,தலைவரையோ
முடிவு செய்து தேர்ந்து எடுக்கவில்லை .
அவர்கள் அரியணை காணவில்லை .
நாம் நமக்குள் கருத்துக்களை பதிவு செய்து
ஒருவருக்கு ஒருவர் உரிமையோடு,உறவோடு
கலந்துரையாடி வருகின்றோம் என்ற எண்ணத்தில்
இதனை திறந்த மனதோடும்,பரந்த உள்ளத்தோடும்
பார்க்க முதலில் முடிவு செய்வோம்.
மரியாதைக்குரிய ஆதம் சுல்தான் காக்கா
நீங்கள் தம்பி கவி மகன் அப்துல் காதர்
கட்டுரை தனை படித்து விட்டு அந்த பகுதியில் தங்கள்
கருத்தை பதிவு செய்து இருக்கலாம் .
அதை விட்டுவிட்டு இதில் நீங்கள் விமர்சிப்பது
போகும் ஊருக்கு பிடிக்காதவன்
வழி சொன்ன கதையாக உள்ளது .
நானும் இந்த வலை தளத்தை நீண்ட நெடிய நாட்களாக
பார்த்து வருவதோடு மட்டும் அல்லாது செய்திகளை விட
முதலில் கருத்துகளை படிக்க ஆர்வம் உள்ளவன் .
பல தடவை கருத்து உரசல்கள் உங்கள் இருவருக்கும்
உண்டாகி உள்ளதையும் பார்த்துள்ளோம் .
அதை வைத்து கொண்டு அவரை விமர்சனம்
செய்வதையும்,அவர் மீது உங்களுக்கு
உள்ள தனிப்பட்ட கோபத்தால் ஒட்டு மொத்த
இந்த அமைப்பினரின் நல்ல எண்ணத்தை பாழாக்கிட
முயற்சி செய்யாதிர்கள் .
தம்பி கவி மகன் அப்துல் காதர் உட்பட இதில் உள்ள
அனைவர்களும் வயதால் சிறியவர்கள் ,உங்கள்
மகனுக்கு சமமானவர்கள் .
எதோ அமைப்பு புதிதாக உருவாக இருப்பதாக கூறி
புலி வருது கதையாக எச்சரித்து உள்ளீர்கள் .
இதனை பார்க்கும் வாசகர்கள் குழம்பி போய்விடுவார்கள்.
சொல்ல வந்ததை விபரமாக சொன்னால் குழப்பம் இல்லை.
என் அன்பு சகோதரர்களுக்கு இதன் மூலம் அறியதருவது நேற்று புதன் மாலை ஈக்கிஅப்பா தைக்கா வளாகத்தில் வைத்து காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பாக ஊரில்
உள்ள அனைத்து நற்பணி அமைப்புகள் கலந்து கொண்ட
உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான ஒரு கலந்துரையாடல்
நடந்தது.அதில் நானும் எங்கள் அமைப்பான
ரஹமத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம் மற்றும்
சமுக நல பேரவை சார்பாக அழைப்பு வர கலந்துகொண்டேன்.
நோன்பு திறப்பு ஏற்பாடும் செய்து இருந்தார்கள்.ஊரில் உள்ள
பெரும்பான்மை நல அமைப்புகள் நண்பர்கள் வந்தும்
நல்லதோர் கருத்துகளை பரிமாற்றம் செய்தோம்.
இதற்கான எல்லா வித ஏற்பாடுகளும் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் நண்பர்கள் நல்ல முறையில் செய்து
உபசரித்தார்கள் .மிக்க நன்றிகள் கோடானு கோடி .
இதில் சமிபத்தில் உருவான காயல் நல அறக்கட்டளை
சார்பாக ஆதம் சுல்தான் காக்கா கலந்தும் கருத்துகள்
வழங்கினார்கள்.
உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான புதிய அமைப்பு
தற்காலிகமானதாக
உருவாக்கும் முயற்சியில் அடிஎடுத்து வைத்து
இருப்பதோடு இந்த மெகா உட்பட எல்லா நல அமைப்புகள்
நாடு போற்ற மக்கள் போற்றும்
நல்லதோர் நகர் மன்றம் உண்டாக்க வேண்டும்
என்ற எண்ணம் கொண்ட அனைவர்களையும்
ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டும்
எனும் நல்ல எண்ணத்தில் அமைக்க முடிவு
செய்ய பட்டுள்ளது .அடுத்து வரும் கூட்டங்களில்
இதில் வராதவர்களின் கருத்துக்களை பெற்று
அமைப்பின் முழு விபரமும் அறியதருவார்கள் .
இன்ஷா அல்லாஹ்.
இதை தான் சூசகமாக சொல்லி உள்ளார்கள் போல்.
அல்லாஹ் ஒருத்தனுக்காக மட்டுமே
நாம் அச்சம் கொள்ளனும்.
அவனுக்காக மட்டுமே நாம்
நன்மையின் அடிப்படையில் ஒன்றுபடணும்
ஒற்றுமையின் கயிற்றை பற்றி பிடிப்போம்
அந்த ஓரிறையின் உதவியால் வெற்றி பெறுவோம்.ஆமீன்.
பகைதனை போக்கி, பலம்தனை பெருக்கி
ஒற்றுமையுடன் நடை போட்டு வெல்வோம்.நண்பர்களே
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross