தலைமை பதவிக்கு போட்டி போடாத அமைப்பு தான் இந்த இரண்டு அமைப்பும் ! posted byK.V.A.T.HABIB MOHAMED (QATAR)[27 August 2011] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 7363
அன்பு சகோதரர்களே ! இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்...தற்காலிக அமைப்பாகிய மெகா மற்றும் காக்கும் கரங்கள் இவை இரண்டும் இந்த ஊரின் தலைமைப்பதவிக்கு என்றுமே ஆசைப்படவும் இல்லை ....அதற்க்கான முன் முயற்சியாகவும் இந்த கூட்டத்தையும் ...அறிக்கை களையும் வெளி இடவும் இல்லை. மாறாக ...இந்த ஊரில் அமைய இருக்கும் நகர் மன்றத்தின் தலைமை மற்றும் உறப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு சரியான ஆலோசனைகளையும் ...வழி காட்டுதல்களையுமே வழங்க சுயமாகவே முன் வந்திருக்கிறதே அல்லாமல் , இந்த விஷயத்தில் நீயா ..நானா என்று போட்டி போட்டு ....சுய கவ்ரவம் பார்த்து அடித்துக்கொள்ளவும் இல்லை என்பதை தான் இந்த அறிக்கை தெளிவு படுத்தி இருக்கிறது .
மாஷா அல்லாஹ் !
ஆகையால் தயவு செய்து யாரும் காக்கும் கரங்களுக்கு சொந்த மான ஜைனுல் ஆப்தீன் அவர்களையோ அல்லது அவர்களை சார்ந்தவர்களையோ ஊரின் நகர் மன்ற தலைமை பதவிக்கு போட்டி இடுவதற்கான அச்சாரம் தான் இந்த கூட்டத்தின் சாயல் என்று மட்டும் தப்பான கருத்தை மனதில் போடுவீர்கலேயானால் ...நீங்கள் தான் தவறாக சிந்திக்கிறீர்கள் என்று அர்த்தம் ...அவர்களின் நோக்கமே அது அல்ல....அல்லாஹ் மிகவும் அறிந்தவன்....பொது வாழ்வில் அடி எடுத்து வைக்கிற அந்த தூய்மையான இளைஞர்கள் அழகாக தங்கள் அறிக்கையில் தெளிவு பட கூறி இருக்கிறாகள். எந்த தலைமை பதவியும் தங்கள் காலடியில் வந்து வீழ்ந்தாலும் அதை எடுத்து தங்கள் தலையில் கிரீடமாக எப்போ வைப்போம் என்று குறி வைத்து துவக்கப்பட்டதும் அல்ல அந்த காக்கும் கரங்கள் அமைப்பு....தூய்மையான அந்த உள்ளத்துக்கு சொந்தக்காரர்களை நாடே போற்றும் , நம் நகர சபை தேர்தல் முடிந்த பின்பு...பொறுத்திருந்து பாருங்கள்...அவசரப்பட்டு ..நமக்குள் விவாதம் என்ற போர்வையில் மனக்கசப்பை தயவு செய்து விதைக்க வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் அன்போடு வேண்டுகிறேன் .
அது போன்றே மெகா அமைப்பின் அமைப்பாளர்களும் எப்போடா நமக்கு தலைமைப்பதவி வந்து சேரும் ...காசு பணத்தை குவிக்கலாம் என்று ஏங்கி தவித்து ...இது தான் தருணம்...இத விட்டா வேற ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது என்ற நோக்கத்திலும் துவக்கப்பட்டதல்ல என்பதையும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். கவிமகன் காதர் அவர்களின் அறிக்கை தெளிந்த நீரோடை ....நல்ல முன் உதாரணம் ...யார் எப்போ எங்கே என்ற கேள்விக்கே இடம் கொடுக்காமல் , காக்கும் கரங்கள் செய்த முதல் கூட்டு கூட்டத்தை வரவேற்று ...நாம் ஒன்றாக சேர்ந்து நல்ல தலைவரை ....நகர் மன்ற உறப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு பாடு படுவோம் என்று நேசக்கரம் நீட்டி இருப்பது பாராட்டுக்குரியது...
நீங்கள் இரண்டு அமைப்புமே ஒன்றாக சேர்ந்து, நமதூர் பெரியவர்களையும் கணியத்தோடு கலந்தாலோசித்து எடுக்கக்கூடிய எந்த முயற்சியும் நிச்சயம் வீண் போகாது என்பதில் கொஞ்சமும் சந்தேக மில்லை தோழர்களே...நீங்கள் இந்த ஊரின் கிங் மேகர்களாக , நலன் நாடும் நல்லோர்களாக விரைவில் அடையாளம் காட்டப்படுவீர்கள் . அந்த காலம் வெகு விரைவில்.!!
உங்கள் இந்த இரண்டு அமைப்பும் இறங்கி இருக்கும் நோக்கம் ஒன்று தான் ....எங்கள் அறக்கட்டளை உங்கள் பணிக்கு ...நம் நகர தந்தை மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வழிகாட்டுதல் எதுவாக இருந்தாலும் அந்த நல்ல நோக்கம் நிறைவேறுவதற்கு என்றும் உறுதுணையாக நிற்கும் எங்களால் இயன்ற அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்று இந்த தருணத்தில் உறுதி கூறுகிறோம். எங்களைப்போன்றே ....சமுதாய நலனில் அக்கறை கொண்ட அனைவரும் ஒரே அணியில் உங்களோடு துணை சேர்வார்கள் என்று நம்புகிறோம்.
இனி தான், சுறுசுறுப்பாக ....கிடைக்கக்கூடிய விமர்சனங்கள் தான் உங்கள் சேவைக்கு கிடைக்கும் அங்கீகாரமாக நீங்கள் நினைத்து ... இன்னும் தொடர்ந்து, நீங்கள் கொண்ட நோக்கை அடையும் வரை அயர்ராதீர்கள் என்று வாழ்த்துகிறோம் . வெற்றி பெறுங்கள் !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross